இடுகைகள்

மனச்சுவர்கள் உடைய வேண்டும்

திடீரென்று சில ஊர்களும் நபர்களும் மாநில எல்லைகளைத் தாண்டி தேசத்தின் பரப்புக்குள்ளும் சர்வதேச எல்லைக்குள்ளும் கவனம் பெற்று விடுவதுண்டு. மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமம் திடீர் பரபரப்பில் தேசிய அலைவரிசைகளின் கவனத்துக்குரியதாக ஆகி விட்டது. இருபத்தைந்து வருடங்களாக இருந்த தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டதன் மூலம் உத்தப்புரம் கிராமத்தில் தீண்டாமையும் சாதி வேறுபாடும் ஒழிந்து விடும் என்று நினைத்துக் கொண்டால் நாம் கண்களை இறுக மூடிக் கொண்டு ஆகாயத்தில் பரப்பதாகக் கனவு காண்கிறோம் என்று தான் அர்த்தம்.

மாற்றப்படும் பெயர்களும் மாறும் முகங்களும்

ரவி என்ற இளம் நடிகர் நடித்த முதல் படத்தின் பெயர் ஜெயம் . இச்சொல் வெற்றி என்ற பொருள் தரும் ஒரு வடமொழிச் சொல்.அப்படம் வியாபார ரீதியில் வெற்றிப் படமாக அமைந்ததால் தனது பெயருடன் அதைச் சேர்த்துக் கொண்டுவிட்டார் ரவி. இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படத்தின் பெயர் something something எனக்கும் உனக்கும் . இத்தலைப்பில் இருந்த ஆங்கில எழுத்துக்களைப் பின்னர் சம்திங் சம்திங் எனத் தமிழ் எழுத்துக்களாக மாற்றி அச்சிட்டனர். இப்பொழுது ஆங்கிலத்தில் இருந்த something something என்பதும் இல்லை . தமிழில் எழுதப்பட்ட சம்திங் சம்திங் என்ற இரட்டைக் கிளவியும் இல்லை .

எல்லாம் விலை குறித்தனவே ; ஆன்மாவும் கூட .

படம்
வரலாறு என்னை விடுதலை செய்யும் - புரட்சியின் வழியாகக் கியூபா நாட்டின் அதிபராகி, நீண்ட நாட்கள் அப்பதவியில் இருந்த    பிடல் காஸ்றோ சொன்ன புகழ் பெற்ற வாசகம் இது.  

விளம்பரத்தூதர்களின் முகங்கள்.

படம்
பள்ளிக் கூட வாகனத்தில் கண்ணயர்ந்தபடி அசைந்து அசைந்து செல்லும் அந்தச் சின்னப் பெண்ணைக் காட்டும் அந்த விளம்பரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பார்க்கவில்லை என்றால் தினந்தோறும் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் இருபதுக்கு /20 கிரிக்கெட் ஆட்டங்களைப் பாருங்கள்.

மொழித்துறைகள் காப்பாற்றப்படும்.

அரசுக் கல்லூரிகளில் முறைப்படியான நடைமுறைகளப் பின்பற்றி ஆசிரியர் களை நியமனம் செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியம், தனியார் கல்லூரிகளில் அந்த முறைகளைப் பின்பற்றும்படி வலியுறுத்துவதில்லை என்ற குறைபாடு அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை மாற்றம் செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை என்ற போதிலும் வேறொன்றைப் பற்றிச் சிந்தித்துப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

விளிம்புநிலைப்பார்வையும் திருக்குறளும்

படம்
முன்னுரை கல்வித்துறை சார்ந்த இலக்கிய ஆய்வுகளும்,கல்வித்துறை சாராத இலக்கியத் திறனாய்வும் பலவிதமாகக் கிளைபிரிந்து கொண்டு வருகின்றன. இந்த விரிவுகளின் பின்னணியில் எழுத்தாக்கம் என்னும் வினையில் இருக்கும் ஆசிரியன், படைப்பு, வாசகன் என்ற மூன்று மையப் புள்ளிகளில் எதற்கு அழுத்தம் கொடுப்பது என்ற வினாக் கள் காரணங்களாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். இலக்கிய ஆக்கம், அதனை ஆக்கியவன், ஆக்கியவன் உண்டாக்கிய இலக்கியத்தின் வடிவம், அதன் உள்ளீடாக இருக்கும் கருத்துநிலை, அவற்றை எல்லாம் வாசித்தபின் எதிர்நிலையிலோ நேர்நிலை யிலோ நின்று தனதாக ஆக்கிக் கொள்ள முயலும் வாசகன் எனச் சில புள்ளிகள் சார்ந்து இலக்கியத் திறனாய்வின் அல்லது ஆய்வின் விரிவுகள் கூடுகின்றன. இலக்கிய உருவாக்கம், இலக்கியத்தின் வடிவம், இலக்கியத்தின் வெளிப்பாடு, இலக்கியத்தின் பயன்பாடு என்பதான கலையியல் சார்ந்த கோட்பாடுகள் என்ற நிலையில் மட்டுமல்ல, இலக்கிய உருவாக்கத்தின் பொது மனநிலை, அதிலிருந்து மாற நினைக்கும் சிறப்பு மனநிலை,இலக்கியத்தை உருவாக்கிய சமூக மற்றும் கால நெருக்கடி, இலக்கியத்தை வாசிப்பதற்குக் கண்டு பிடிக்கப்பட்ட முறைகள், வாசிப்பின் விளைவுகள்,