இடுகைகள்

பெண்ணை மொழிதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆணெழுதும் பெண்ணெழுத்து : ஜெயந்தனின் அவள்

ஜெயந்தனுக்கு அந்தக் கதைக்கு ஒரு தலைப்பு வைக்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. கதையின் தலைப்பே அவள் என்பது தான். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு நிகழ்வாக மாறி விட்ட இலக்கியச் சிந்தனை, 1981 இல் வந்த சிறுகதைகளில் ஆகச் சிறந்த கதையாகத் தேர்வு செய்த கதை இது. தேர்வு செய்தவர் கிராமப் புற மனிதர்களை விதம் விதமாக எழுதிக் காட்டிய கி.ராஜநாராயணன்.

பயணத்தின் நினைவுகள் :அம்பையின் வாகனம்.

சென்னை போன்ற பெருநகரங்களுக்கு அடிக்கடி செல்லும் இக்கால மனிதர்கள் அம்பையின் இந்தக் கதையைக் காலப் பொருத்தமற்றது எனச் சொல்வார்கள். அல்லது பழைய கதை என்றாவது சொல்லக்கூடும். வாகனம் என்று தலைப்பிட்டு அம்பை எழுதிய அந்தக் கதை அவ்வளவு பழைய கதை அல்ல. பன்னிரண்டு வருடங்கள் தான் ஆகிறது.

நல்ல மேய்ப்பர்கள் : பிரபஞ்சனின் மரி என்னும் ஆட்டுக்குட்டி

முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளி வந்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து சிறப்புத் தேர்வுகள் நடைபெறும். பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறாமல் போன மாணவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்தச் சிறப்புத் தேர்வை எழுதித் தேர்வு பெற்று அடுத்த கல்வி ஆண்டுத் தொடக்கத்தில் கல்லூரிக்குள் நுழைவார்கள். பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி அடையாத வர்களுக்கு அந்த ஓராண்டு ஒரு விதத்தில் தண்டனை தான். இந்தத் தண்டனைக் காலத்தில் பலர் திசை மாறிப் போகும் வாய்ப்புக்களே அதிகம்.

பொதுக்கல்வியே போதுமென்ற மனநிலை..

படம்
பெண்களின் கல்வியில் தமிழகம் காட்டி வரும் அக்கறைகள் மெச்சத் தக்கவையாக உள்ளன. தமிழக அரசு இலவச சைக்கிள், உதவித் தொகை போன்றன கொடுப்பதின் மூலம் காட்டும் அக்கறைகளைச் சொல்லவில்லை. பெற்றோர்கள் காட்டும் அக்கறைகளையே சொல்கிறேன்.ஆண்களுக்குச் சமமாகவும் பலநேரங்களில் ஆண்களைத் தாண்டியும் பெண்கள் படித்துப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில் மறுபடியும் ஒரு நாடக இயக்கம்

1970- களின் இறுதியில் மதுரையில் செயல்படத் தொடங்கிய நிஜநாடக இயக்கம் அதன் முழுவீ£ச்சையும் வெளிப்படுத்திய காலம் எண்பதுகள் தான். தெரு நாடகங்கள் மூலமாக மதுரையைச் சுற்றியுள்ள கிராமங் களுக்கும் கல்லூரிகளின் வளாகங்களுக்குள்ளும் நுழைந்த பின்னர் எண்பதுகளின் இறுதியில் பார்வையாளர்களை அரங்கை நோக்கி இழுக்கும் மேடை நாடகங்களுக்கு மாறியது. ஒரு நாள் நாடக விழா, மூன்று நாள் நாடக விழா என நிஜநாடக இயக்கம் நடத்திய நாடக விழாக்களில் பங்கேற்ற பார்வையாளர்களில் அதிகமானவர்கள் நகரத்துக் கல்லூரிகளின் மாணாக்கர்களும் ஆசிரியர்களும் தான். தன்னெழுச்சியாகப் பார்வையாளர்கள் நாடகம் பார்க்க வந்தார்கள் என்று சொல்ல முடியாது என்றாலும், கல்லூரிகளில் பணியாற்றிய ஆர்வம் கொண்ட ஆசிரியர்களின் உதவியோடு மாணாக்கர்களை அரங்கை நோக்கி வரவைக்க முடிந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக மதுரையில் அத்தகைய முயற்சிகள் செய்வதை நிஜநாடகம் கைவிட்டு விட்டு ஆண்டுக்கு ஒரு நாடகம் எனத் தயாரித்து மேடையேற்றுவதோடு நின்று விட்டது. நிஜநாடக இயக்கம் விட்ட இடத்தைத் தொடர இப்பொழுது மதுரையில் ஒரு நாடகக் குழு முயன்றுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

பரபரப்பின் கணங்களும் விளைவுகளும்

தமிழின் நிகழ்கால இலக்கியத்தளத்திலும் சிந்தனைத்தளத்திலும் செயல்படும் பத்து எழுத்தாளர்களின் பத்து நூல்களை வெளியிடும் வெளியீட்டு நிகழ்ச்சியை உயிர்மைப் பதிப்பகம் நடத்தியது. சென்னை ஓரியண்ட் லாங்மேன் புத்தகக்கடையின் பின்புறம் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் -07-01-06, மாலை 6 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுக்கு, தமிழ் நாட்டின் மதிப்புமிக்க அரசியல் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு தலைமை தாங்கினார். அவர் ஒவ்வொரு நூலாக வெளியிடுவதும் அதைப் பெற்றுத் கொண்டவர், பதினைந்து நிமிடத்திற்குள் நூலை அறிமுகப்படுத்தியோ, விமரிசனம் செய்தோ பேசி முடிப்பதும் என்பது பதிப்பகத்தாரின் ஏற்பாடு. ஏற்பாட்டின்படி முதல் நான்கு நூல்கள் அ.ராமசாமியின் பிம்பங்கள் அடையாளங்கள், மு. சுயம்புலிங்கத்தின் நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள், எம். யுவனின் கைமறதியாய் வைத்த நாள், எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு என்ற நான்கு நூல்களும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதனைப் பெற்றுக் கொண்ட பத்திரிகையாளர் எஸ் விஸ்வநாதன் (ப்ரண்ட் லைன்), சுகுமாரன், பாவண்ணன், பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் பேசி முடித்தனர். நான்காவது நூலின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் மேடையிலி