இடுகைகள்

கல்விப்புல ஆய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும்

தனக்கான அடிப்படைத் தேவைகளான உணவு , உடை , உறையுள் ஆகியனவற்றைத் தேடுவதன் முகாந்திரமாகச் சமூக நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டது மனித சமூகம். அப்படி உருவாக்கிக் கொண்ட நிறுவனங்களுக்குள் மனிதர்கள் வாழ வேண்டும் என்று வலியுறுத்திக் கூறும் பனுவல்களை -அற நூல்களாக உருவாக்கித் தனது கருத்துக் கருவூலகமாகக் கொண்டன ஒவ்வொரு மொழிவழிச் சமுதாயமும். இப்படியான அறநூல்கள் ஒவ்வொரு மொழியின் இலக்கிய வரலாற்றிலும் தொடக்க காலத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டு கருத்துருவாக்கிகளாக விளங்கியுள்ளன.  தமிழ்மொழியைத்தங்கள் வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் கருத்துப் பெட்டகமாக இருப்பது திருக்குறள்.

வரலாறு எழுதுவது பற்றிச் சில குறிப்புகள்

இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வே கிடையாது- என்றொரு வாக்கியத்தைக் கல்வித்துறையில் செயல்படும் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. இக்கூற்றை முழுமையான உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது; கொஞ்சமும் உண்மையில்லை என்று தள்ளி விடவும் முடியாது.

தொல்காப்பியம்- சங்க இலக்கியங்கள் திணைநிலைக் கூற்றுகள்

முன்னுரை: தமிழ்க் கவிதையின் மரபைப் பற்றிப் பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் எனக் கொள்வதில் பின் வாங்குவதில்லை. கல்வித்துறை சாராத இலக்கியத்திறனாய்வாளர்களும் கூடத் தமிழ்க் கவிதையியலின் தொடக்கம் இவையே என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். ஆனால் அம்மரபுதான் இடையூறுகளின்றி இன்று வரை தொடர்கிறதா? எனக் கேட்பவருக்கு ஆம் என்றோ, இல்லை என்றோ உறுதியான பதில் ஒன்றைச் சொல்ல முடியாது.

தமிழ் இலக்கியம் கற்பித்தலும் நவீனத் தொழில் நுட்பமும்

கற்பித்தலின் பரிணாமம் கற்றல் என்பதற்குள் தகவல் திரட்டல், சேமித்தல், பயன்படுத்துதல் ஆகிய மூன்று பரிமாணங்கள் உண்டு . பள்ளிக் கல்வி தொடங்கி ஆய்வுக் கல்வி வரையிலான எல்லாவற்றிலும் இம்மூன்று நிலைகளும் வெவ்வேறு விதமாக நடை பெறுகின்றன. பாடத் திட்டம் சார்ந்து ஆசிரியர் தரும் தகவல்களை மனதில் சேமித்துத் தேர்வுத் தாளில் எழுதிப் பயன்படுத்தும் வேலையைப் பள்ளிக் கல்வியின் மாணாக்கர்கள் செய்கிறார்கள். பள்ளிக் கல்வியில் அப்படிச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதும், அதைச் சரியாகச் செய்பவர்களைச் சிறந்தவர்கள் எனப் பாராட்டுவதும் ஓரளவுக்குப் பொருத்தமானது. இந்நிலையைப் பள்ளிக் கல்வியோடு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அந்த அடிப்படையில் தான் உயர்கல்வியான கல்லூரிக் கல்வியின் தொடக்க நிலையிலேயே துறை சார்ந்த சிறப்புக் கல்விக்குள் மாணாக்கர்கள் நுழைக்கப் படுகின்றனர். சிறப்புக் கல்விக்கான பாடத் திட்டத்தில் படிக்க வேண்டிய பனுவல்கள் எனக் குறிப்பிடுவ தோடு பார்வை நூல்களையும் பாடத்திட்டக் குழுக்கள் தருவதற்கு அப்படியொரு நோக்கம் இருப்பதே காரணம்.

சுஜாதாவின் அரங்கியல் பார்வை: எழுத்துப் பிரதிகளின் ஊடாக

படம்
 எழுத்தாளர் சுஜாதாவை அதற்கு முன்பும் சந்தித்திருக்கிறேன் என்றாலும் அன்றைய சந்திப்பு நாடகம் சார்ந்த சந்திப்பு. அத்துடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த சந்திப்பும் கூட.இந்திய அரங்க வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒரு நாள் என்று சொன்னால் மிகை அல்ல. உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு அரங்க வியலாளர் பீட்டர் புருக் தனது வாழ்நாள் சாதனைப் படைப்பான மகாபாரதத்தின் காட்சிகளை இந்தியாவில் நடத்திக்காட்ட அவரது நாடகக்குழுவினருடன் இந்தியா வந்திருந்தார். புரூக்கின் மகா பாரதத்தில் பங்கேற்ற கலைஞர்களை நேரடியாகப் பார்த்ததோடு, அவர்களின் மேடைக்காட்சிகளின் துணுக்குகள் சிலவற்றையும் பார்த்தோம். மேடை நிகழ்வாகவும், தனித்தனியாகவும் பேசிக் கொண்டிருந்தோம். பத்து மணி நேரம் மகாபாரத்தின் 200 நிமிடப் படக்காட்சி வடிவமும் அவரோடு கொண்டு வரப் பட்டிருந்தது. அதையும் பார்த்து அசந்துபோன நாடகக்காரர்களின் ஒருவனாக நான் இருந்தேன்.

இக்கால இலக்கியம் குறித்த பல்கலைக்கழக ஆய்வுகள்

இக்கால இலக்கியம், ஆய்வுக்கான பரப்பு என்பதாகப் பல்கலைக் கழகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மூன்று பத்தாண்டுகளைத் தாண்டி இருக்கிறது.தமிழகப் பல்கலைக் கழகங்களில், தமிழியலின் எல்லைகளை விரிவடையச் செய்ததில் முக்கியப் பங்காற்றியுள்ள மதுரைப் பல்கலைக் கழகமே -இன்றைய மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்- இக்கால இலக்கியங்களைப் பாடங்களாக ஆக்கியதிலும், ஆய்வுப்பொருளாக ஆக்கியதிலும் முன்கை எடுத்தது. அதன் விளைவுகள் இன்று விரிந்துள்ளன; பரந்துள்ளன.

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்

படம்
இலக்கியம் பற்றிய- இலக்கிய வரலாறு பற்றிய இலக்கியத்தின் அடிப்படைக் கச்சாப்பொருட்கள் பற்றிய மேற்குலகப் பார்வைகளிலும், கிழக்குலகப் பார்வைகளிலும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. ஓர் இலக்கியப் பனுவலை அதன் இயல்பைக் கவனித்து அப்படைப்பு ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கியப் போக்குக்குள் அடங்கக்கூடியது எனப் பேசுவது கீழ்த்திசை மரபல்ல; ஒருவிதத்தில் மேற்கத்தியத் திறனாய்வு மரபின் வழிப்பட்டது. மேற்கத்தியத்திறனாய்வு மரபு கலை , இலக்கியப்படைப்புகளை வகைப்படுத்திப் பேசும் பொருட்டு சில போக்குகளை அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறது.

பெரியாரியத் தத்துவமும் பெண்ணியமும்

படம்
இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருககிறார்கள் என்றாலும், இன்றைய இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுப்பத்தைந்து வயதைத் தாண்டிய பலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் இருக்கக் கூடும். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறாக இருக்கிறது. ஐரோப்பிய மனநிலையை நேர்மறை யாகவோ,எதிர்மறையாகவோ தங்களுக்குள் உள்வாங்கியவர்களாகவே இந்தியத் தன்னிலை அல்லது தமிழ்த் தன்னிலை என்பது உருவாகி நிற்கிறது என்பது நிகழ்கால இருப்பு.