ஆவணப்படுத்துதலின் அரசியல்: நகரும் நாட்டுப் புறங்கள்
முன்குறிப்பு: இந்தக் கட்டுரை இ.பத்மநாப ஐயர் தொகுத்த பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் பங்கேற்ற தொகுப்பு ஒன்றில் இடம்பெற்ற கட்டுரை. அத்தொகுப்பிற்கு அவர் வைத்த பெயர் யுகம் மாறும். வெளிவந்த ஆண்டு 1999. இந்தக் கட்டுரை அந்த ஆண்டு எழுதியதல்ல. 1988 இல் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் – முன்னும் பின்னும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி இதழில் எழுதிய கட்டுரையையே 1999 –ன் சூழலுக்கேற்ப நிகழ்காலத் தகவல்களுடன் மாற்றி எழுதி “ நகரும் நாட்டுப் புறங்கள் “ என்று தலைப்பிட்டேன். இப்போது 2012 இல் வலைப்பூவில் அதை அப்படியே பதிவேற்றம் செய்கிறேன். இந்தக் கட்டுரை இற்றைப்படுத்த் வேண்டிய் ஒன்று என்பதை அறிவேன். இப்போது செய்யத் தோன்றவில்லை ======================================================================== இசைஞானி இளையராஜா, கி.ராஜநாராயணன், நடிகர் நாசர், ந.முத்துசாமி, மீனா சுவாமிநாதன்,தேவிகா, புஷ்பவனம் குப்புசாமி, கழனியூரன், டாக்டர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், டாக்டர் கே.ஏ.குணசேகரன், டாக்டர் தே.லூர்து, டாக்டர் மு,ராமசுவாமி,டாக்டர் கு.முருகேசன்- இந்தப் பெயர்கள் தமிழக நாட்டுப் புறவியல் க...