கையறு நிலையின் கணங்கள்
இந்த ஆண்டு( 2021) இல் வெளிவந்த கவிதைத் தொகுதிகள் இரண்டு அடுத்தடுத்து வாசிக்க க் கிடைத்தன. முதலில் வாசித்தது ரூபன் சிவராஜா வின் எழுதிக் கடக்கின்ற தூரம். இரண்டாவதாக வாசித்தது சுகன்யா ஞானசூரி யின் நாடிலி. எழுதியவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமலேயே கூட இந்தக் கவிதைத் தொகுதிகளின் தலைப்பை வைத்துக் கொண்டு கவிதைகள் எழுப்பப் போகும் சாராம்சத்தைப் பேசிவிடலாம்.