சேகுவோரா
[மலையாள மூலம்: கோபன். தமிழில் ; அ.ராமசாமி] காட்சி.1 நாடகம் தொடங்கும்பொழுது மேடையில் ஒரு சவப்பெட்டி. அதனுள் விகாரமான தோற்றம் கொண்ட முதியவன் அண்ணாந்து பார்த்தபடி கிடைத்தப்பட்டுள்ளான். சவப்பெட்டியினுள் முழுமையான வெளிச்சம். சவப்பெட்டியின் முன்பாக மூன்று ராணுவ அதிகாரிகள் நடந்து வருகின்றனர். சவப்பெட்டியிலிருந்த வெளிச்சம் மங்கிக் குறைகிறது. மேடையில் உள்ள மூன்று மேஜை விளக்குகள் அடுத்தடுத்து எரிகின்றன. சேகுவோராவின் ஓவியம் பின் திரையில் தெரிகின்றது.