இடுகைகள்

பாடத்திட்ட உருவாக்கமும் பங்கேற்பு அரசியலும்

படம்
இந்திய அளவிலான பள்ளிக்கல்விப் பாடத் திட்டத்தில் இடம்பெற்ற இரண்டு கேலிச் சித்திரங்கள் கண்டனத்திற்குள்ளானதை நாம் அறிவோம். அதே நேரத்தில் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றில் இடம் பெற்றதாகச் சொல்லப்பட்ட சிறுகதை ஒன்றும் கண்டனத்தைச் சந்தித்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்புக்கான பகுதி -1 (தமிழ்) பாடத்தில் இடம் பெற்ற டி. செல்வராஜின் நோன்பு சிறுகதை அது.

கரிசல் இலக்கியத்தில் கோணங்கியின் வரவு

படம்
தமிழ்மொழியின் புனைகதை வரலாறு எழுதப்படும் நிலையில் கரிசல் எழுத்தாளர்களின் இடம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாக மாறிவிட்டது. குறிப்பாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளுக்குப் பின் இவர்கள் ஓர் இயக்கமாகவே கரிசல் இலக்கியத்தை வளர்த்து வருகிறார்கள். கரிசல் எழுத்தாளர் என்று அறியப்படாத -ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறுகதைகளை எழுதிவிட்டு மறைந்த கு.அழகிரிசாமியைத் தனது குருவாகக் கொண்டு கரிசல் காட்டில் முன்னத்தி ஏர் ஓட்டியவர் கி.ராஜநாராயணன்.

ஜரீதா பீடா போட்டேனா.. ஜூர்ர்ன்னு ஏறிடுச்சு:முதல் சென்னைப் பயணம்

படம்
திருச்சிக்கு வடக்கே சென்னையை நோக்கி முதன் பயணம் செய்த போது வயது 25. அதற்கு முன்பு தனியாகவும் நண்பர்களோடு கும்பலாகவும் பயணம் செய்த ஊர்கள் எல்லாம் தமிழ் நாட்டின் தென்பகுதியில் தான் இருந்தன. படிப்புக்காலச் சுற்றுலாப் பயணங்கள் எல்லாம் பேருந்தில் தான். பழனி, கோயம்புத்தூர், ஊட்டி எனப் பள்ளிப் படிப்பின்போது சென்ற பயணங்களில் எல்லாம் நாலுவரிசைக்கு ஓருத்தர் எனக் கணக்குப் போட்டு ஆசிரியர்களும் ஆசிரியைகளும் கண்கொத்திப் பாம்பாய்க் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

விளிம்பு

படம்
விளிம்பு  விளிம்பு  [இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ] இப்சனின் பொம்மை வீடு நாடகத்தின் உச்சநிலைக்காட்சியின் சாயல் கொண்ட விளிம்பு (THE EDGE ) ஓரங்க நாடகம் ஒன்றின் மாதிரி. தனியொரு நடிகையாக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்ட மாணவிகளுக்காக எழுதப் பட்டது.புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை மாணவிகள் அவ்வப்போது மேடை ஏற்றிப் பார்த்திருக்கிறார்கள். 

வரங்களும் சாபங்களும் - தொன்மங்களைத் திரும்ப எழுதுதல் எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ

படம்
பொழுதுபோக்கு எழுத்திலிருந்து தீவிர எழுத்தைப் பிரித்துக் காட்டும் வரையறைகளைக் கறாரான விமரிசன அளவுகோல்கள் கொண்டு இதுவரை யாரும் விளக்கிக் காட்டவில்லை. அப்படி விளக்கிக் காட்ட நினைக்கும் விமரிசகன் முதலில் கவனப் படுத்த வேண்டியது எழுத்தில் வெளிப்படும் காலப் பிரக்ஞை என்பதாகத் தான் இருக்க முடியும்.

ஆடிய காலும் பாடிய வாயும்

லீணா மணிமேகலையை நோக்கிச் சுட்டு விரலை நீட்டிய கண்ணனைக் காணாமல் போகச் செய்யும் விதமாக ஜெயமோகன் வீசிய அம்புகள் நாலாபக்கமும் பாய்ந்து கொண்டிருந்த போது கை பரபரப்புடன் அரித்தது. ஆனால் இங்கு வார்சா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் நடக்கும் காலம். நம்மூர் போலத் தாளை மாணவர்கள் பக்கம் வைத்து விட்டுக் கண்காணிப்பு வேலை செய்ய முடியாது. பாதி எழுத்துத் தேர்வு; பாதி செய்முறைத் தேர்வு என்பதால் மாணவிகளைத் தமிழ் பேசச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே பின் வாங்கி விட்டேன். பின் வாங்க இது மட்டுமே காரணமல்ல. ஜெயமோகன் சொல்வது போல அந்நிய நிதிகள் நம் நாட்டு ஆய்வுகளைக் கட்டமைக்கின்றன எனச் சொன்னவுடனேயே அவர் ஆதரிக்கிற எல்லாவற்றையும் நானும் ஆதரிக்கிறேன் என்பதாகப் பாவனை செய்து கொண்டு கிடைக்கப் போகும் அர்ச்சனைகளும் பட்டங்களும் கூடப் பின்வாங்கலின் காரணங்களாக இருந்தன. போலீஸ் நடத்தும் என்கவுண்டர் கொலைகள் ஒருவிதத்தில் தவிர்க்க முடியாதவை எனவும், இலங்கைக்குச் சென்ற இந்திய ராணுவம் அமைதிப்படையாகத் தான் இருந்தது; வன்முறையில் – குறிப்பாகப் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபடவில்லை என்றெல்லாம் எழுதும் ஜெயமோகனின் அணியின் த