இடுகைகள்

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்: பண்டங்களாக்கப்படும் பண்டிகைகள்

படம்
 வெற்றி பெற்ற திரைப்படத்தின் நாயகி ஆங்கிலத்தில் சொல்லும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பன்னாட்டு கைபேசி வியாபார நிறுவனமோ, சொகுசுக்கார் தயாரிப்பு நிறுவனமோ சொல்ல வைக்கின்றன. அதனைக் கேட்பதற்காகக் காலை எட்டு மணி முதல்  மொத்தக் குடும்பமும் தயாராகத் தொலைக்காட்சி முன்னால் அமைதியாக இருக்கிறது.  ஏழு மணிக்கு வழங்கிய சமயச் சான்றோரின் உரையை வழங்கியவர்கள் தங்க ஆபரணங்களை மீன்கடை வியாபாரம் போல் பரப்பி விற்கும் நிறுவனமாக இருக்கிறது.

வசந்தபாலனின் அரவான்: படைப்பாளுமை அற்ற வெளிப்பாடு

படம்
திரைப்பிம்பங்கள் பேசும்மொழி, அம்பிங்கள் உலவும் வெளி, பிம்பங்களின் தன்னிலையையும் பிறநிலையையும் கட்டமைக்கும் வாழ்நிலை ஆகிய மூன்றுமே ஒரு திரைப்படத்திற்கான அடையாளத்தை உருவாக்கக் கூடியன. இம்மூன்றும் ஓர்மை கெடாமல் அமையும் சினிமாவே தனித்த அடையாளமுள்ள சினிமாவாக வகைப்படுத்தத்தக்கது. நமது சினிமாக்காரர்கள், அவர்கள் உருவாக்கும் திரைப்படங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க நினைத்து அதன் விளம்பரங்களில் ‘தமிழ், தமிழர்கள்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் போதெல்லாம்   ”தமிழ்ச் சினிமா”   என்பதின் அடையாளத்தை எதனைக் கொண்டு இயக்குநர் உருவாக்கியிருப்பார் என்ற கேள்வியோடு தான் படம் பார்க்கச் செல்வேன்; கவனமாகச் சினிமாவைப் பார்த்துப் பேசும் ஒவ்வொருவரும் அப்படித்தான் செல்ல வேண்டும்.

நடத்துநர்கள் இல்லை; சோதனைகள் உண்டு

படம்
ஏப்ரல் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை. முட்டாள் தனமாக ஏமாந்து விடக் கூடாது என்று நினைத்து எங்கும் கிளம்ப வில்லை. அடுத்த நாள் திங்கட்கிழமை ஊர் சுற்றிப் பார்க்கலாம் எனத் தோன்றியது. எங்கே போவது என்ற திட்டம் எதுவும் இல்லை. வீட்டிற்கு அருகில் இருக்கும் அல் –அலோயோனிக்கோவ் நிறுத்தத்தில் டிராம் ஏறி விலோஷ்னோவாவில் இறங்கி மெட்ரோ ரயிலில் செல்லலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் ஏறி விட்டார். சோதனை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் விலோனோவ்ஸ்காவில் இறங்கவில்லை.

இன்றைக்கு உங்களுக்கு வழங்கப்படும் நேரம் 23 மணி நேரம் தான்

படம்
காலையில் வழக்கம் போல எழுந்து காலைக் கடன்களை முடித்து கணிணியின் திரையைத் திறந்தபோது 06.15,2012 மார்ச் 25 எனக்காட்டியது. எல்லா நாளும் இரவு 11.00 மணியை ஒட்டித் தூங்குவது வழக்கம். எத்தனை மணிக்குப் படுத்தாலும் ஆறு மணி நேரம் கழித்து விழிப்பு வந்து விடும். அதிகாலை 05.00 யை ஒட்டி எழுந்து விடுவேன். நேற்று இரவு 11. 00 மணியளவில் தான் தூங்கப் போனேன். ஆனால் எழுந்து பார்த்தபோது கணிணியின் திரை 06.15 எனக் காட்டியது. அலைபேசியின் திரையிலும் 06.15 என்று தான் இருந்தது. அலமாரியில் பத்து நாட்களாகவே வெளியே நல்ல வெளிச்சம். கடந்த இருந்த கடிகாரத்தில் நேரம் 05.15 மணி என்றிருந்தது.