இடுகைகள்

ஜெயகாந்தனின் பாரிஸுக்குப் போ: காலத்தை எழுதுவதற்கான முன்மாதிரி

படம்
விடுதலைக்குப் பிந்திய இந்திய சமூகத்தின் திசை வழிகள் சரியானவை தானா? என்ற கேள்வியைப் பல்வேறு தளங்களில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்த கால கட்டமாக 1950-களின் பின் பாதியையும் 60-களின் முன்பாதியையும் சொல்ல வேண்டும்.. சிந்தனை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் ஐரோப்பிய மாதிரிகளை இந்தியர்கள் உள்வாங்க வேண்டும் என நம்பிய ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக்காலம் அது. அவரது நிலை பாடுகளுக்கு எதிராக இருந்தவர்கள் பண்பாட்டு வெளியை முன்னிறுத்திப் பலவகையான சொல்லாடல்களை உருவாக்கினார்கள். குறிப்பாக ஐரோப்பிய வகைப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது அதிகப் படியான எதிர்ப்புணர்வுகளை வெளிப் படுத்தினர்.மேற்கத்தியக் கல்வி முறையின் அடிப் படைக் கோட்பாட்டையும் கற்பிக்கும் முறையியலையும் விட்டுவிட்டு வெறும் பணியாளர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது என விமரிசனம் செய்யப்பட்டது.

மீட்டெடுக்க வேண்டிய தனித்தன்மை

படம்
நம்முன் நிகழும் நிகழ்வுகளுள் எவை நம்பிக்கை சார்ந்தவை? எவை பாவனை சார்ந்தவை எனக் கண்டுபிடிப்பது எல்லோருக்கும் சுலபமல்ல. அப்படிக் கண்டு பிடிப்பதில் தேர்ந்தவர்களும் கூட தொடர்ச்சி யான கவனிப்பின் மூலமே சாத்தியப் படுத்து கின்றனர். சாத்தியப்படும் நிலையில் சிலவற்றை நம்பிக்கைகள் என்கிறார்கள்; சிலவற்றைப் பாவனைகள் என்கின்றனர். நம்பிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன; பாவனைகள் அம்பலமாக்கப்படுகின்றன.

பெயரிலும் இருக்கிறது; முகவரியிலும் இருக்கிறது

படம்
முன்குறிப்பு : இந்தக்கட்டுரையில் இடம்பெறும் பெயர்களும் தகவல்களும் உண்மையானவை; உண்மையத் தவிர வேறில்லை; உண்மையை உறுதி செய்வதற்காகக் கற்பனை தவிர்க்கப் பட்டுள்ளது . ============================================= உலக நாடக இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைத் தமிழில் ‘செகசுப்பியர்’ என்று ஒருவர் மொழிபெயர்த்து எழுதி இருந்தார் ஒருவர். செகப்பிரியர், செகசிற்பியர் என்ற மொழிபெயர்ப்புகள் எல்லாம் அந்தப் பெயருக்குத் தமிழில் உண்டு. எனக்கோ பொல்லாத கோபம். பெயரை மொழிபெயர்க்கலாமா? பெயரின் உச்சரிப்பை – ஓசையை மாற்றலாமா?

ஆவணப்படுத்துதலின் அரசியல்: நகரும் நாட்டுப் புறங்கள்

முன்குறிப்பு : திரும்பவும் எழுத வந்துள்ள விமலாதித்த மாமல்லன் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நடந்த இலக்கிய சர்ச்சைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். வலைப்பூவிலும் முகப்பனுவலிலும் அவர் தட்டிவிடும்   ஒவ்வொன்றும் மைய உருவாக்கத்தை அழிக்கும் தடாலடியாக இருக்கிறது. அவர் வேகத்திற்கோ, அவரோடு மோதும் எழுத்து ஜாம்பவான்களின் வேகத்திற்கோ ஈடுகொடுக்கும் வேகம் என்னிடம் இல்லை.   எம்.டி.முத்துக் குமாரசாமியின் தேசிய நாட்டுப் புறவியல் மையம் செய்து வரும் ”ஆவணப்படுத்துதலின் பின்னணிகள்” பற்றிய குறிப்பொன்றை எழுதியுள்ளார். மிரட்டிப் பணிய வைப்பது அல்லது பணம் கரந்து விடுவது என்பது மாமல்லனின் நோக்கமாக இருக்கலாம்   என அந்தக் குறிப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் எம்.டி. எம்.மின் கூற்று அங்கதத்தின் உச்சம் என நினைத்துக் கொண்டிருந்த போது, ஆவணப்படுத்துதலில் ’சந்தேகங்கள் எழுப்ப வேண்டியதில்லை’ என, அப்பாவியாகக் கருத்து சொன்ன ராஜன்குறை விலா நோகச் சிரிக்க வைத்துவிட்டார். தன்னை மானுடவியல் மாணவர் எனச் சொல்லும் ராஜன்குறை அதிலிருந்து தோன்றிய நாட்டுப்புறவியலைத் தனக்குச் சம்பந்தம் இல்லாத துறையாகச் சொன்னது கண்ணில் நீரை வரவழைத்த