இடுகைகள்

வார்சாவிற்கு வந்து விட்டேன்.

படம்
என்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக அறிமுகப் படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை என்றாலும் அதுதான் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக ஆக்கியிருக்கிறது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைப்பள்ளி தொடங்கப் பட்டபோது(1989) அதன் முதல் விரிவுரையாளராக தேர்வு செய்யப்பட்ட நான், 1997 இல்  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை தொடங்கப்பட்ட போது அத்துறைக்காகத் தேர்வு செய்யப்பட்ட முதல் ஆசிரியர்.  வழக்கமான பல்கலைக்கழக ஆசிரியப் பணியோடு தமிழில் வரும் தீவிர இதழ்களில் சமகால இலக்கியம், கலை, பண்பாட்டு நிகழ்வுகள் மற்றுமல்லாது அரசியல் நிகழ்வுகளையும் விமரிசனம் செய்பவனாக- வெகுமக்கள் மனநிலை சார்ந்து கருத்துக்களை முன் வைத்து விவாதிப்பவனாக அறியப்பட்டுள்ளேன். மாணவப் பருவம் தொடங்கி இலக்கியப் பத்திரிகைகளோடு தொடர்பு கொண்டு எழுதி வருகிறேன். பட்டப்படிப்புக் காலத்தில் அசோகமித்திரன் பொறுப்பில் வந்த கணையாழியில் கவிதைகள் எழுதியிருக்கிறேன். அதே காலகட்டத்தில் ஆனந்த விகடன் பொன்விழாவை ஒட்டி மாணவர் பக்கம் வெளியிட்ட போது அதிலும் கவிதைகள் எழுதினேன். கவிதை

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

படம்
ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவது என்பது எல்லாத் துறையிலும் நடக்கின்ற ஒன்றுதான்.இலக்கியத் துறையில் செயல்படும் ஒருவன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு, "நிகழ்கால இலக்கியப்பரப்பில் எனது இடம் என்ன ?" என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு விடை தேட வேண்டும். திருப்தியளிக்கும் பதில் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் வாசகர்களுக்கு அல்லது இலக்கிய வரலாற்றுக்குப் புதுவகையான படைப்பு கிடைக்க வேண்டும். தூர்வை என்ற நாவல் மற்றும் மூன்று சிறுகதைத் தொகுதிகள் வழியாகத் தமிழ்ப் புனைகதைப் பரப்பில் ஓரிடத்தை உறுதி செய்து கொண்ட சோ.தர்மன், கிடைத்துள்ள இடத்தில் திருப்தி அடை யாமல் மேலும் கேட்டுக்கொண்டதின் விளைவு அவரது இரண்டாவது நாவல் கூகையாக உருவாகியுள்ளது.

தமிழ் ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் விடுதலையும்

படம்
தமிழக எல்லைக்குள் வாழ நேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தி தன்னையொரு தமிழ் உயிரியாகக் கருதிக்கொண்டாலும்சரி அல்லது இந்திய மனிதனாகக் கருதினாலும் சரி கடந்த பதினைந்து ஆண்டுகளில்-1990 முதலான பதினைந்து ஆண்டுகளில்- இரண்டு முக்கியமான நிகழ்வுளுக்காகத் தன் கவனத்தைத் திருப்பியிருக்க  வேண்டும். முதலாவது நிகழ்வு ஊடகப் பெருக்கம் என்னும் சர்வதேச நிகழ்வு.

தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்

படம்
பண்பாடு என்பதை இரட்டை எதிர்வுகளின் மோதலாகக் கணித்துப் பேசும் ஆய்வாளர்கள் தங்களின் சார்புக் கேற்ப தரவுகளைச் சேகரித்து வாதிட்டு நிறுவ முயலும் காலத்தை இன்னும் நாம் கடந்து விடவில்லை . நிகழ்காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் எதிர்வாக இருப்பது மைய நீரோட்டப் பண்பாடு x விளிம்புநிலைப் பண்பாடு என்று எதிர்வு எனச் சொல்லலாம்.