இடுகைகள்

பரப்பியம் : ஒரு விவாதம்

ஜெயமோகனின் இணையதளத்தில் பரப்பியம் என்ற சொல்லைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்துவது குறித்து நிதானமான விவாதம் ஒன்று நடந்திருக்கிறது. பொறுப்பாகத் தன் கருத்தை முன் வைக்கும் ராஜன்குறையின் முன் மொழிவைக் காது கொடுத்துக் கேட்டுத் தன் பக்க நிலைபாட்டை முன் வைத்துள்ளார் ஜெயமோகன். இதையெல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இது போன்ற ஆரோக்கியமான விவாதச் சூழல் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் சாத்தியமில்லை என்பது போலத் தோற்றம் இருப்பதுதான்.   இந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு கருத்துச் சொல்ல வேண்டும் என்பது போல ஜெயமோகன் எழுதியிருந்தார்.  எனது சோம்பேறித்தனத்தால் உடனே எழுத முடியாமல் போய்விட்டது. ஆனால் அங்கும் இங்குமாகப்

விளையாட்டுத் தனமான தேசம்

மக்களுக்கான பொதுப் பேருந்துகளில் பயணம் செய்கிறவர்களாக நீங்கள் இருக்கலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட அலுவலகப் பணியாளர்களுக்கான சிறப்புப் பேருந்தில் பயணம் செய்கிறவர்களாகவும் இருக்கலாம். செப்டம்பர் 10 முதல் உங்கள் பயணத்தின் போது தென்னாப்பிரிக்காவில் நடக்கும் சாம்பியன் கோப்பைக் கிரிக்கெட் பற்றி

விழுப்புண்களும் விழுத்தண்டுகளும்

   “ இன்று எனது வாழ்க்கையில் முக்கியமான நாள் ” என ஏதாவது ஒரு நாளைப் பலரும் கூறக் கேட்டிருக்கலாம். அப்படிக் கூறுபவர்களிடம் கொஞ்சம் கூடுதலாக விசாரித்துப் பாருங்கள். அந்த நாள் அவரது வாழ்க்கையில் நல்லது அல்லது கெட்டது என இரண்டில் ஒன்று நடந்த ஒரு நாளாக இருக்கும்.

மண்ணின் மைந்தர்களின் மறுபக்கம்

இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும், இன்றைய இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுபத்தைந்து வயதைத் தாண்டிய சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது.