இடுகைகள்

நாடகமாக வாசித்தல்; அனுபவங்களிலிருந்து உண்டான பாடம்

எழுத்துப்பிரதிகள், ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு அனுபவம் தரக்கூடியன. ‘ அனுபவம்’ என்ற பதத்திற்கு ‘அர்த்தத்தளம்’ என்று அண்மைக்காலங்களில் பொருள் சொல்லப்படுகிறது. ஒருவருடைய அர்த்தத்தளத்திற்கு, அவரது புறச்சூழல்கள் காரணமாக இருக்கின்றன. சமூகப் பொருளாதாரப்புறச்சூழல்களும், அக்கால கட்டத்தில் கட்டியெழுப்பி உலவவிடப்படும் கருத்தியல் புனைவுகளும் படைப்பாளியையும் பாதிக்கின்றன. வாசிப்பவர்களையும் பாதிக்கின்றன.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

படம்
தமிழுக்கு இருக்கை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையோடு நிதிதிரட்டும் பணியில் இரண்டு இந்திய- அமெரிக்க மருத்துவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவலின்பேரில் இந்தப் பல்கலைக்கழகம் தமிழர்களின் வாயிலும் மூளையிலும் பதிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 400 ஆவது ஆண்டுவிழாவைக்கொண்டாட இன்னும் 20 ஆண்டுகள் உள்ளன. 1636 இல் தொடங்கப்பட்ட மசுசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரான் பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியின் பெயர் கேம்பிரிட்ஜ். இப்பல்கலைக்கழகம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பழையது.

ஜேம்ஸும் திருமதி ஜேம்ஸும்

இடம் : முன்மேடை ஒரு நடுத்தரவர்க்கத்தின் வீட்டு   ஹால் . பின் இடது புறம்   சமை யலறையின் ஒரு பகுதி தெரிகிறது . பின் நடுமேடையில் ஒரு படுக்கையறையின் கதவு பாதி திறந்து கிடக்கிறது . பின் வலது மேடையில் இருக்கும் அறையில் புத்தக அலமாரி , கணினி போன்றன தெரிகின்றன . ஹாலின் மையத்தில் படுக்கையறைக்கு முன்னால் மூவர் அமரக் கூடிய ஒரு சோபா ; அதன் இருபுறமும் ஒருவர் அமரும் சோபாக்கள் . வேலைப்பாடுகள் கொண்ட டீபாய் . நடு வலது மேடையில் ஒரு மேசைமீது விளக்குடன் ஒரு ஸ்டேண்ட் நிற்கிறது . அதிலிருந்து வரும் வெளிச்சத்தில் அதன் முன்னால் கிடக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் அல்லது புத்தகம் படிக்கலாம் . இடது புறம் நிற்கும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கலாம் .

சிற்பியின் நரகம்

படம்
புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் சிறுகதை, நாடகத்திற்குத் தேவையான முரணைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் பிரதி. கதைமாந்தர்களுக்கிடையேயுள்ள முரணை, இக்காலகட்ட இந்திய நிலைமையோடு பொருத்திப்பார்த்து வாசித்து நாடகமாக எழுதப்பட்டுள்ளது. நாட்டில் வளர்ந்துவரும் மதவாதம்தான் சிறுகதையை நாடகமாக எழுதத்தூண்டியது. சரியான மேடையேற்றங்கள், அதன் பொருத்தத்தை உணரச்செய்யும். பாண்டிச்சேரி கூட்டுக்குரல் அமைப்பு மதுரையிலும் பாண்டிச்சேரியிலுமாக இரண்டுமுறை மேடையேற்றியுள்ளது. 

பண்பாட்டுப் பெருவிழா: பெட்னா நினைவுகள்

படம்
ஒற்றை நோக்கம் கொண்ட பயணங்களை மட்டுமே திட்டமிடுவதில்லை. தமிழ்நாட்டுக்குள் திட்டமிடும் பயணங்களையே ஒன்றிற்கு மேம்பட்ட நோக்கங்களோடு தான் திட்டமிடுவேன். வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இல்லாமல் திட்டமிடக்கூடாது என்றிருந்தேன். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்த ஆண்டுக் கோடை காலத்தைக் கழிப்பதென்ற திட்டத்துடன் முதலில் இணைந்தது ஒரு கனடாவின் யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கம். அதனைக் கல்வி நோக்கத்தில் அடக்கலாம் என்றால், இரண்டாவதாக இணைந்துகொண்ட நியூஜெர்சியில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA) நடத்தும் தமிழ் விழாவைப் பண்பாட்டுப் பங்கேற்பு என வகைப்படுத்தவேண்டும்.

திறமான ஆய்வு நூல்கள் - தேடிப்படித்த நூல்கள்

 கல்விப்புலப்பார்வையில் திறமான ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுநோக்கைத் திறத்துடன் வெளிப்படுத்திய ஆய்வுநூல்கள் இவை

ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள்

படம்
இப்படியொரு நாடகத்தை எழுதுவேன் என நினைக்கவில்லை. எழுதக் காரணமாக இருந்தவர், அப்போது எனது மாணவராக இருந்த சிபு எஸ்.கொட்டாரம் (இப்போது கள்ளிக்கோட்டை நாடகப்பள்ளியின் ஆசிரியர்). இயக்கத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்த அவரது தேர்வுக்கான தயாரிப்பாகச் சாமுவேல் பெக்கட்டின் புகழ்பெற்ற நாடகமான கோதாவுக்காத்திருத்தல் -வெயிட்டிங் ஃபார் கோடார்ட்- நாடகத்தைத் தமிழாக்கித் தரமுடியுமா எனக்கேட்டார்.