நீளும் வாரக்கடைசிகள்
ஒவ்வொரு கம்பத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்றித் தேசப்பற்றைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், தேச முக்கியத்துவம் வாய்ந்த யாராவது இறந்ததைக் கொடியை இறக்கி அடையாளப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தோடு இணையத்திற்குள் நுழைந்தபோது அப்படியொன்றும் நடக்கவில்லை என்பது புரிந்தது. அரைக்கம்பத்தில் கொடியை இறக்கிப் பறக்கவிடுவது நினைக்கப்படும் நாளின் அடையாளம் என்பது புரிந்தது.