விளையாட்டுத் தனமான தேசம்

மக்களுக்கான பொதுப் பேருந்துகளில் பயணம் செய்கிறவர்களாக நீங்கள் இருக்கலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட அலுவலகப் பணியாளர்களுக்கான சிறப்புப் பேருந்தில் பயணம் செய்கிறவர்களாகவும் இருக்கலாம். செப்டம்பர் 10 முதல் உங்கள் பயணத்தின் போது தென்னாப்பிரிக்காவில் நடக்கும் சாம்பியன் கோப்பைக் கிரிக்கெட் பற்றிக்காதில் ஏதாவது செய்தி வந்து விழுவதை நீங்கள் தவிர்த்து இருக்க முடியாது.