தாய்மையென்னும் புனிதம்
' ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதைகொண்டிருக்க வேண்டும் ' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். ' கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை ' என்பதுபோன்ற திகில் தன்மையைக் கொண்ட தொடக்கம். சிக்கலான மனிதர்களை முன்னிறுத்தும் கதை என்பதான குறிப்புகள்கூட இல்லை. காலச்சுவடு 200 ஆம் இதழில் வந்துள்ள உமா மகேஸ்வரியின் குளவி என்ற தலைப்பிட்ட அந்தக் கதையை வாசிப்பதை நிறுத்திவிடலா ம் என்று தோன்றியது . ஆனால் இடையிடையே ஓவியங்களோடு மூன்று பக்கத்தில் முடியும் கதை தான் என்ற நிலையில் தொடர்ந்து வாசிக்க லாம் என்று தோன்றியது.