இடுகைகள்

திறனாய்வுப்பார்வை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பரப்பியம்- பரப்பியவாதம்- வெகுஜனக்கலை

ஜெயமோகனின் வலைத்தளத்தில் நடக்கும் இந்த விவாதத்தில் எனது பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இதில் எனக்குச் சொல்ல இன்னும் இருக்கிறது . அதை அடுத்த பதிவில் தர முயற்சிக்கிறேன். இப்போது ஜெயமோகனின் வலைத்தளத்தில் இருப்பதை அப்படியே தருகிறேன் அ.ராமசாமி

பரப்பியம் : ஒரு விவாதம்

ஜெயமோகனின் இணையதளத்தில் பரப்பியம் என்ற சொல்லைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்துவது குறித்து நிதானமான விவாதம் ஒன்று நடந்திருக்கிறது. பொறுப்பாகத் தன் கருத்தை முன் வைக்கும் ராஜன்குறையின் முன் மொழிவைக் காது கொடுத்துக் கேட்டுத் தன் பக்க நிலைபாட்டை முன் வைத்துள்ளார் ஜெயமோகன். இதையெல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இது போன்ற ஆரோக்கியமான விவாதச் சூழல் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் சாத்தியமில்லை என்பது போலத் தோற்றம் இருப்பதுதான்.   இந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு கருத்துச் சொல்ல வேண்டும் என்பது போல ஜெயமோகன் எழுதியிருந்தார்.  எனது சோம்பேறித்தனத்தால் உடனே எழுத முடியாமல் போய்விட்டது. ஆனால் அங்கும் இங்குமாகப்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்

படம்
இலக்கியம் பற்றிய- இலக்கிய வரலாறு பற்றிய இலக்கியத்தின் அடிப்படைக் கச்சாப்பொருட்கள் பற்றிய மேற்குலகப் பார்வைகளிலும், கிழக்குலகப் பார்வைகளிலும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. ஓர் இலக்கியப் பனுவலை அதன் இயல்பைக் கவனித்து அப்படைப்பு ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கியப் போக்குக்குள் அடங்கக்கூடியது எனப் பேசுவது கீழ்த்திசை மரபல்ல; ஒருவிதத்தில் மேற்கத்தியத் திறனாய்வு மரபின் வழிப்பட்டது. மேற்கத்தியத்திறனாய்வு மரபு கலை , இலக்கியப்படைப்புகளை வகைப்படுத்திப் பேசும் பொருட்டு சில போக்குகளை அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறது.

பெரியாரியத் தத்துவமும் பெண்ணியமும்

படம்
இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருககிறார்கள் என்றாலும், இன்றைய இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுப்பத்தைந்து வயதைத் தாண்டிய பலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் இருக்கக் கூடும். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறாக இருக்கிறது. ஐரோப்பிய மனநிலையை நேர்மறை யாகவோ,எதிர்மறையாகவோ தங்களுக்குள் உள்வாங்கியவர்களாகவே இந்தியத் தன்னிலை அல்லது தமிழ்த் தன்னிலை என்பது உருவாகி நிற்கிறது என்பது நிகழ்கால இருப்பு.