இடச்சித்திரிப்புகளின் பின்னணிகள்- ஹரியின் படங்களை முன் வைத்து

இயக்குநர் அகத்தியனுக்குப் புகழ் பெற்றுத்தந்த சினிமா 'காதல் கோட்டை' அந்த சினிமா படம் வெற்றி பெற்றதால் படத்தின் பெயரில் ’காதல்’ இடம்பெற வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகம் தவித்த தவிப்பு சொல்லி மாளாது. கடைசியில் ’காதல்’ என்றே ஒரு படத்தை எடுத்துவிட்டு ஓய்ந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் தயாரிப்பாளா்களும் இயக்குநா்களும் எப்பொழுதும் மந்தைத் தனத்தின் மீது பற்றுக் கொண்டவா்கள். இரண்டெழுத்துப் படம் வெற்றி பெற்றால் அடுத்து வரும் படங்களுக்கெல்லாம் இரண்டெழுத்தில் பெயா் வைப்பார்கள்.