இடுகைகள்

செப்டம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எண்பதும் நாற்பதும்

படம்
போலந்து, வார்சா பல்கலைக் கழகத்திற்குத் தமிழ் கற்பிக்கப்போன பேராசிரியர்கள் பலருக்கும் கிடைக்காத ஓர் அனுபவம் எனக்குக் கிடைத்தது. 2011 அக்டோபர் 10 இல் வார்சா பல்கலைக்கழகத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். இரண்டு நாட்கள் கழித்துத் துறையில் நடக்க இருக்கும் 3 நாள் கருத்தரங்க அழைப்பினைக் கொடுத்துவிட்டு நீங்கள் இருக்கப்போகும் இந்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் இரண்டு பெரும் நிகழ்வுகளில் பங்கேற்கப்போகிறீர்கள் என்றார். என்ன நிகழ்வுகள் என்று நான் கேட்கவும் இல்லை; அவர் சொல்லவுமில்லை.

கண்டிக்கவே முடியாத நிலையில் தண்டனை

படம்
இதனை எதிர்பார்த்துத் தமிழகம் இருந்திருக்கவில்லை.குற்ற நிரூபணம், அதற்கான தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அத்துடன் அபராதத் தொகையாக ரூ 100 கோடி என்பதை நினைவுக்குள்கொண்டுவரவும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் மனநிலையை அ இ அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் நிச்சயம் தவறான நினைப்பு என்றே சொல்வேன். தமிழ்ப்பொதுமனமே அப்படித்தான் நினைக்கிறது. இப்படிச் சொன்னால் அந்தப் பொதுமனம் எங்கே இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும். 18 ஆண்டுகளாக நடந்த ஒரு வழக்கில் இப்படியொரு தீர்ப்பு வரும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் எதிர்பார்க்கவில்லை, அதைவிடக் குற்றஞ் சாட்டியவர்களே எதிர்பார்த்திருப்பார்களா? தமிழ்நாட்டின் அரசாங்கமும், அதனை நடத்தும் ஆளும் கட்சியினரும் மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளும் கூட எதிர்பார்க்கவில்லை என்பதையே இரண்டு நாட்களாகச் செய்தி அலைவரிசைகளில் வாசிக்கப் பெற்ற செய்திகளும், முன் வைக்கப்பெற்ற விவாதங்களும் காட்டப்படும் காட்சிகளும் சொல்கின்றன; விளக்குகின்றன. பெங்களூரை நோக்கிய ஒட்டுமொத்தப்பயணங்கள், கொண்டாட்ட மனநிலைக் காத்திருப்புகள், எதிர்கொள்ள முடியாத சோக...

தனித்தன்மையான கல்வி; தனித்துவமான வாழ்க்கை: எதிர்நீச்சலடிக்கும் எதிர்பார்ப்பு.

படம்
வார்சாவில் நான் முழுமையான மொழியாசிரியனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கசப்போடு தான் முதலில் ஏற்றுக் கொண்டேன். கசப்புக்கான முதல் காரணம் முழுமையான மொழி ஆசிரியனாக என்னை எப்போதும் கருதிக் கொண்டதில்லை. அத்துடன் மொழிக்கல்வியில் ஒரே விதமான கற்கை முறையை எல்லா இடத்திலும் பின்பற்ற முடியாது. ஒருவரின் தாய்மொழியைக் கற்பிக்கும் அதே முறையை எல்லா நிலையிலும் பின்பற்றக் கூடாது என்பது மொழியாசிரியர்களுக்குத் தெரியும். தாய்மொழியாக அல்லாமல் ஒரு நாட்டின் இன்னொரு மாநிலமொழியைக் கற்பிக்கும் முறையைக் கூட அயல் தேசத்தில் மொழி கற்பிக்கும்போது பின்பற்ற முடியாது. வார்சாவில் தமிழ் கற்பிக்கப்போகும் முன்பு இந்த முறைகளையெல்லாம் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவனாக நான் செல்லவில்லை. 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : நவீனத்துவ சினிமாவின் தமிழ் முகம்

படம்
இரண்டு படங்களையும் அடுத்தடுத்துப் பார்க்க நேர்ந்தது ஒரு தற்செயல் நிகழ்வு. படம் பார்க்கலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டு அரங்கிற்குக் கிளம்பியபோது மனதில் இருந்த படங்கள் இவையல்ல. நினைத்துப் போன படங்களைப் பார்க்க முடியாமல் திசைமாறிப் பார்த்த இரண்டு படங்களுமே பிடித்த சினிமாக்களின் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டது தற்செயலின் அடுத்த கட்டம். திரைக்கு வந்த முதல் நாளில் இரண்டையும் பார்க்க நேர்ந்துவிட்டதையும்கூடத் தற்செயல் விளைவின் பகுதியாகவே சேர்த்துக் கொள்ளலாம்.(முதல் படம் கார்த்திக் சுப்பராஜின் ஜிகிர்தண்டா ; சென்னை நகரத்தின் பல் அரங்கு வளாகம் ஒன்றில். இரண்டாவது ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம்; திருநெல்வேலியில் அரைநூற்றாண்டு கடந்த அரங்கம் ஒன்றில்)