திருமணம் என்னும் நிக்காஹ்: தமிழ்ச் சினிமாவின் பொதுப் போக்கிலிருந்து ஒரு விலகல்

காதல் பற்றிப் பேசாத ஒரு தமிழ்ச்சினிமா ஆண்டில் ஒன்றிரண்டு கூட வருவதில்லை. ‘இவர்களின் காதல் எப்படிப்பட்டது தெரியுமா?’ என்றொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு கதையை விரிக்கிறார்கள் நமது தமிழ்ப்பட இயக்குநர்கள். அப்படி விரிக்கும் தொண்ணூறு சதவீதக் கதைகள் நமது சங்கக் கவிதைகளின் விரித்தி உரைகள் தான்.