இடுகைகள்

மார்ச், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூரம் அதிகம்; நேரம் குறைவு

தஞ்சையின் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய போது நேரம் காலை 6.35. நெல்லையில் நேற்றிரவு கிளம்பிய நேரம் 11.35. ஏழுமணி நேரப் பயணத்தில் வந்து சேர்ந்தாகி விட்டது. இத்தனைக்கும் ஒரே பேருந்தில் பயணம் செய்யவில்லை. இடையில் மதுரையில் இறங்கி முக்கால் மணி நேரம் காத்திருந்து அங்கிருந்து கிளம்பும் இன்னொரு அரசுப்பேருந்ததைப் பிடித்துத்தான் வந்தேன்.

மரணத்தை எதிர்கொள்ளும் சாகசப் பயணம்

மனிதர்களின் பயணங்களுக்குப் பின்னால் வெறும் கொண்டாட்ட மனநிலை மட்டுமே இருப்பதில்லை. திகைத்து நிற்கும் சாகசங்களும் தேவைப்படுகின்றன. தூக்கம் வராமல் போனதற்கு அந்த சாகசப் பயணமே காரணம் என்று தோன்றியது. நடை பயணங்களாலும்சரி, வாகனப் பயணங்களானாலும்சரி அதன் முடிவில் உடல் ஓய்வை எதிர்பார்க்கவே செய்கிறது.

திரள் மக்கள் ஊடகங்களும் பரப்பியல் வாதமும்..

நமது காலம் ஊடகங்களின் காலம். பொருளாதார அடித்தளத்தின் பேரால் சமூகக்கட்டமைப்பை வரையறை செய்யும் மார்க்சியச் சமூகவியலாளர்கள் கூட 2000- க்கு முன்னும் பின்னுமான இருபதாண்டுகாலச் சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information society) என்றே வரையறை செய்கின்றனர் . நகரம் மற்றும் பெருநகர வாசிகள் ஊடகவலைப் பின்னலுக்குள் தன் விருப்பத்தோடு வந்து சேர்ந்து விட்டனர். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே நுழைந்து கொண்டிருக்கின்றனர்.

ஆமாம் நண்பர்களே! அதிசயங்கள் நடக்கத்தான் செய்தன.

படம்
அனுபவங்கள் எப்போதும் கடந்தகாலத்தைச் சேர்ந்தவைகளாகவே இருக்கின்றன. கடந்த காலத்தை நிகழ்காலத்துக்குக் கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அந்த நிகழ்வை அதிசயம் என்று தானே சொல்ல வேண்டும். மலையடிவாரக் கிராமங்களிலும், ஆற்றங்கரையோர வீடுகளிலும் வாசம் செய்த மனிதர்கள் நகரவாசிகளாகிவிட்ட பின் தங்கள் இளமைக்காலத்தை நினைத்து எழுதும் நினைவுகள் உலக இலக்கியத்தில் முக்கியமான கவிதை வகைகளாக விளங்குகின்றன. நினைவலைகளைப் (Nostalgic) பிடிக்காத மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்….

இப்போது நான் நிற்பது பயணச்சீட்டு வாங்குவதற்காக அல்ல; வாங்கிய பயணச்சீட்டை ரத்து செய்வதற்காக. ஆறு நாட்களுக்கு முன்பு நான் பதிவு செய்த போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனது பெயர் நேற்றுத் தான் உறுதியானது. ஆனால் இன்றோ ரத்து செய்யும்படி ஆகி விட்டது. அப்படி ஆனதற்குக் காரணம் நான் அல்ல; இந்திய தேர்தல் ஆணையம் செய்த அறிவிப்பு தான் காரணம். இந்தத் தேர்தல் இன்னும் என்னென்ன திருப்பங்களைக் கொண்ட வரப்போகிறதோ தெரியவில்லை.

விருதுகளின் பெறுமதிகள்

படம்
தைமாதம் தமிழ்நாட்டின் அறுவடைக்காலம். அதனைத் தொடர்வது கொடையின் காலம். கொடை நடைபெறுகிறபோது கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. உடல் உழைப்பில் ஈடுபடும் தமிழக விவசாயிகளுக்குத் தை மாதம் கொண்டாட்டத்தைக் கொண்டு வரும் மாதமாக இருந்த நிலை இப்போது இல்லை. அதற்குப் பதிலாகத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் போன்ற புத்திஜீவிகளுக்கு தை மாதம் அறுவடைக்காலமாக மாறிவிட்டது.

சமகாலத்தமிழ்ச் சினிமாப் பண்பாடு - ஓர் அலசல்

படம்
ரஜினிகாந்த் நடித்து 1994 இல் வெளிவந்த பாட்ஷா வெற்றிப் படமா ? தோல்விப் படமா ? என்று யாரும் கேள்வி எழுப்பி விடைதேட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு நகரங்களிலும் வெளியிடப் பட்ட பெரும்பாலான திரையரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களையும் , பெருநகர அரங்குகளில் 200 நாட்களையும் தாண்டி ஓடிய படம்.