இடுகைகள்

கதையிலிருந்து நாடகம்: இமையத்தின் அணையும் நெருப்பை முன்வைத்து

படம்
இமையத்தின் அணையும் நெருப்பு கதையைப் பத்திரிகையில் வந்தபோதும், புத்தகத்தில் ஒன்றாக வந்தபிறகும் வாசித்திருக்கிறேன். அதைப் பற்றி எழுதவும் செய்துள்ளேன். அந்தக் குறிப்பு இதோ. அணையும் நெருப்பு எழுப்பும் வினாக்கள் உலகப் பொதுவான ஒன்று. பாலியல் வேட்கையின் மீதான விசாரணையாக அமைந்துள்ள இந்தக் கதை எழுதப்பட்டுள்ள முறையே கவனிக்கத்தக்க ஒன்று. அக்கதையில் இடம் பெற்றுள்ள இரண்டு பாத்திரங்களில் ஒன்று ஒற்றைச் சொல்லைக் கூடப் பேசாமல் (ஆண்) கல்லைப் போல அசைவற்று அமர்ந்திருக்க, சந்தோஷம் பேசுகிறாள். பேசுகிறாள்.. பேசிக் கொண்டே இருக்கிறாள். அவளது பேச்சு- அவளின் கேள்விகள் அந்த இளைஞனிடம்  மட்டும் கேட்கப்படும் கேள்விகள் அல்ல. பெண்களின் எந்தச் சூழலையும் கவனிக்காமல், தனது வேட்கையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் ஆண்களின் மீது வீசப்படும் தாக்குதல்கள் அவை.

கெட்டுப்போகும் பெண்கள்

படம்
மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்று வரையறுத்துச் சொல்ல முடிவதுபோல் அடிப்படை உணர்வுகள் இவைதான் என்று வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அடிப்படைத்தேவைகளைப் பெறவும் தனதாக்கிக்கொள்ளவும் உரிமைகொண்டாடவும் உருவாக்கப்படும் நடைமுறைகளே உழைப்பின் விதிகளாக மாறுகின்றன. உழைப்பு விதிகளின்படி கிடைக்கும் அடிப்படைத்தேவைக்கான பொருட்களைப் பிரித்துக்கொள்ளும் முறைகள் உருவாக்கப்படும்போது பொருளியல் அல்லது தொழில்முறை நடைமுறைகள் உருவாகின்றன.

குற்றப்பரம்பரை - சட்டம் உருவாக்கிய சொல்

குற்றப்பரம்பரை என்ற சொல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சொல். ஜமீந்தார்களால் வசூல்செய்யப்பட்டுத் தங்களுடைய பங்காக வந்துசேரவேண்டிய வரவுகளான வரி, திறை, கிஸ்தி ஆகியவற்றைக் கொண்டுவந்து கஜானாவில் சேர்ப்பதில் இடையூறுகளைச் சந்தித்தனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். இடையூறுகளை ஏற்படுத்தியவர்கள் அடக்கப்படவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பெற்ற சட்டமே குற்றப்பரம்பரைச் சட்டம். பிரித்தானிய ஆட்சியர்களால் 1871 இல் அறிமுகம் ச ெய்யப்பட்ட இந்தச் சட்டம் செயல்படுத்தப்படும்போது ஒருவிதமான வட்டாரத் தன்மையை உள்வாங்கிக் கொண்டது.

தமிழினி:ஈழப்போரின் சாட்சியாகவும் மனச்சாட்சியாகவும்

படம்
இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் எந்த எழுத்தையும் உடனடியாக வாசிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை நான் உருவாக்கிக் கொண்டதில்லை . ஆவலுடன் காத்திருந்து வந்தவுடன் வாசித்த இளம்பிராயத்து ஆவலைக் கடந்தாகிவிட்டது.  இப்போது அச்சில் வரும் எழுத்துகளை வரிசைகட்டி நிறுத்தி வாசிக்கும் நிதானம். ஆனால் தமிழினியின் ஒருகூர்வாளின் நிழலில் அந்த வரிசையைத் தள்ளிவிட்டு முன்வந்து வாசிக்கும் நெருக்கடியைக் கொடுத்த பிரதியென்பதைச் சொல்லியாகவேண்டும்.எனக்கும் தமிழினிக்குமான உறவுதான் இந்த வரிசையுடைப்பிற்குக் காரணம்.