October 07, 2016

நிலவியலில் நிறுத்திய எழுத்து


என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்; எல்லாவற்றையும் நானே திட்டமிடுகிறேன் எனக் கூறுவதற்குப் பின்னால் இருப்பது நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கைதான் முழுமையாகச் செயல்படுகிறதென்று சொல்லமுடியாது. தன்பிள்ளை, தன்குடும்பம், தன்போக்கு என இருப்பவர்களுக்கு வேண்டுமானால், ஓரளவுக்கு இது சாத்தியமாகலாம். அதுகூட ஓரளவுக்குத்தான். பொதுமனிதர்களை நோக்கி இயங்கும் ஒருவரால், அவரது செயல்பாடுகளை முழுமையாக அவரே திட்டமிட்டுக்கொள்ள முடியாது. எழுத்து, இலக்கியம் என்பது அடிப்படையில் பொதுமனிதர்களை நோக்கிய இயக்கம். ஆகவே எழுத்தாளர்களின் செயல்பாடுகளைச் சூழல் இயக்குகிறது.

September 26, 2016

காந்தி எனும் பெயர் வைத்துக்கொண்ட நபர்

ஒரு கதை
=======
மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் மகாத்மா காந்தியைப் பாடமாகப் படித்ததற்கு முன்பே எனக்குக் காந்தியாரைத் தெரியும். இத்தனைக்கும் நான், இந்திய விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவன். எனக்குத் தெரிந்த காந்தியார், தச்சபட்டியென்னும் எனது கிராமத்தோடு ஐந்து கிராமங்களை அடக்கிய பஞ்சாயத்தின் தலைவர்அவரது உண்மையான பெயரை, எனது மூத்த அண்ணனின் திருமணப்பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். அதிலும்கூட காந்தியார் என்ற ‘............’, அவர்களது தலைமையில் என்று அச்சிடப்பட்டிருந்தது. அச்சிடப்பட்ட அந்த உண்மைப்பெயரும்  அன்றோடு மறந்துவிட்டது. அதற்கு முன்பும் பின்பும் எனது நினைவில் இருக்கும் பெயர் காந்தியார் தான்.

September 09, 2016

பாரதீய ஜனதா அரசின் புதிய கல்விக்கொள்கை: சில குறிப்புகள்- சில சந்தேகங்கள்- சில எதிர்பார்ப்புகள்


ஆட்சி மாற்றங்கள் கொள்கை மாற்றங்களை முன்வைப்பது தவிர்க்க முடியாதது. மாறிய ஆட்சியை விரும்பாதவர்கள், அதன் முன்வைப்புகள் அனைத்தையும் நிராகரிப்பதும்விரும்பியவர்கள், அவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு ஏற்பதும் நடக்கும். அப்படி நடப்பது பெரும்போக்கு அல்லது பொதுப்புத்தி. பெரும்போக்கிலிருந்து விலகி நின்று சிந்திக்கவேண்டுமென நினைப்பவர்கள், கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தில் இணைத்துச் சிந்தித்துப்பேசுவது இயல்பு. அப்படியான பேச்சுகளே ஒரு பொருளின் மீதான விமரிசனச் சொல்லாடல்களாக அமையும். திரு. நரேந்திர தாமோதர்தாஸ் மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ள பாரதீய ஜனதாகட்சி ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளுக்குப் பின் இந்தியாவின் கல்வித் துறையில் செய்யவேண்டிய மாற்றங்களைப் பற்றிய முன்வரைவு ஒன்றைபுதிய கல்விக்கொள்கையாக - கல்விமுறைக்கான உள்ளீடுகளாக - முன்வைத்துள்ளது.

September 07, 2016

பண்பாட்டு நிலவியலும் திணைக்கோட்பாடும்

முன்னுரை:
தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பண்பாட்டு நிலவியல் என்னும் புதுவகைக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்திப் பேசும் இக்கட்டுரையின் முதல்பகுதி  பண்பாட்டு நிலவியல் என்னும் மேற்கத்தியப் புதுவகைக் கோட்பாட்டை விளக்குகிறது. தொடர்ந்து தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படும் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்களை இணைத்து உருவாக்கும் பாவியல் அல்லது கவிதைக் கோட்பாடு விளக்கப்படுகிறது. அதன் வழியாக தமிழின் கவிதையியல் கோட்பாடான திணைக்கோட்பாடும் பண்பாட்டு நிலவியல் என்னும் சிந்தனைமுறையும் எந்தெந்த விதங்களில் ஒத்துப்போகின்றன என்பதை இணைத்துக்காட்டுகிறது; விலகல்களையும் சுட்டிக்காட்டுகிறது.  தொடர்ந்து இக்கோட்பாட்டைப் பயன்படுத்தித் தமிழில் ஆய்வு எந்தெந்தப் பரப்பிற்குள் நுழையமுடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.