இடுகைகள்

வெட்டியெடுக்கப்பட்ட சதைத்துண்டு: லதா உதயனின் அக்கினிக்குஞ்சுகள்

படம்
நாவல் இலக்கியம் புறநிலை சார்ந்தும் அகநிலை சார்ந்தும் பெரும் கொந்தளிப்புகளை எழுதிக்காட்டுவதற்கான இலக்கிய வகைமை. பெரும் கொந்தளிப்புகள் உருவாக்கக் காரணிகளாக இருக்கும் அரசியல் பொருளாதாரச் சமூக முரண்பாடுகளை அதன் காலப்பொருத்தத்தோடும், சூழல் பொருத்தத்தோடும் எழுதிக்காட்டும் புனைவுகள், வரலாற்று ஆவணமாகும் வாய்ப்புகளுண்டு.

பொழில்வாச்சி நா.கணேசன் என்னும் பல்திற ஆளுமை

படம்
ஊர்ப்பெயரை முன்னொட்டாக கொள்வது தமிழ்ப் பெயரிடல் மரபு. அதனை அறிந்துள்ள நா. கணேசன் தனது பெயரை இப்படி வைத்துக்கொண்டுள்ளார். பொழில்வாச்சி என்பது பொள்ளாச்சி என அழைக்கப்படும் நகரத்தின் தொன்மைப் பெயர். நா.கணேசன் இப்போது இருப்பது அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்து ஹூஸ்டன் நகரில். பணியாற்றியது அமெரிக்காவின் ‘நாசா’ வான்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானியாக. ராக்கெட் தொழில் நுட்பப் பணியில் உயர்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். இப்போது அமெரிக்காவின் விமானப்படைப்பிரிவுக்கு அறிவியல் தொழில்நுட்பங்களைத் தரும் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார்.

நுண் முரண்களின் விவாதக்களமாகும் நீயா? நானா?

படம்
விஜய் தொலைக்காட்சியின் நீயா? அதன் தொடக்க ஆண்டுகளில் இரவு 9 மணிக்குத் தொடங்கி 11 வரை நீண்ட நிகழ்வாக இருந்தது. அடுத்த நாள் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்றாலும் பார்த்துவிட்டுப் படுத்தோம். அந்நிகழ்வு தமிழ்ச் சமூகத்தின் உளவியலையும் சமூகவியலையும் கேள்விக்குட்படுத்தும் தலைப்புகளில் - பொருண்மைகளில் விவாதங்களை நடத்தியது. அந்தக் காலகட்டத்தில் ஊடகங்களைக் குறித்து எனது பார்வைகளை எனது வலைப்பக்கத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்படியொரு விமரிசனக்கட்டுரையாக எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பு: ‘ கலைக்கப்படும் மௌனங்கள்’

நெடுங்கொம்பு மாடுகள்: டெக்சாஸின் அடையாளச்சின்னம்

படம்
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்தில் அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருந்தது. இந்தோ -சீனா போரில் இந்தியாவிற்கு ஆதரவு காட்டியவர் அப்போதை அதிபர் ஜான் பிட்ஜிரால்டு கென்னடி. அவர் டல்லாஸ் நகரத்தில் கொல்லப்பட்டார் என வானொலியில் செய்தியாகக் கேட்டிருக்கிறேன்; பள்ளிப்பருவத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், இங்கே வந்திறங்கியபோது டல்லாஸ் (DALLAS) என உச்சரிப்பது தவறு;‘டேலஸ்’ என்றே உச்சரிக்க வேண்டும் என உணர்த்தப்பட்ட து. ஆனாலும் நான் டல்லாஸ் என்றே எழுதுகிறேன்.

ஓக்லகாமா: திரும்ப நிகழ்த்தும் பயங்கரம்

படம்
ஓக்லகாமா தேசிய அருங்காட்சியகம் என்பது உண்மையில் பொருட்களைப் பார்வையாளர்களுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சியகம் அல்ல. அது ஒரு நினைவகம். அப்படிச் சொல்வதுகூடச் சரியில்லை. அந்தக் குறிப்பிட்ட நாளில் இரண்டே இரண்டு நிமிடத்தில் என்ன நடந்தது? என்பதைத் திரும்பத்திரும்ப நிகழ்த்திக் காட்டும் ஓர் அரங்க நிகழ்வு என்று சொல்வதே சரியாக இருக்கும்.

எனது நாடக எழுத்துகள் - வாசித்தல் – ஆக்கம் – மீளாக்கம்

படம்
எழுத்துப்பிரதிகள், ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு அனுபவம் தரக்கூடியன. ‘ அனுபவம்’ என்ற பதத்திற்கு ‘அர்த்தத்தளம்’ என்று அண்மைக்காலங்களில் பொருள் சொல்லப்படுகிறது. ஒருவருடைய அர்த்தத்தளத்திற்கு, அவரது புறச்சூழல்கள் காரணமாக இருக்கின்றன. சமூகப் பொருளாதாரப்புறச்சூழல்களும், அக்கால கட்டத்தில் கட்டியெழுப்பி உலவவிடப்படும் கருத்தியல் புனைவுகளும் படைப்பாளியையும் பாதிக்கின்றன. வாசிப்பவர்களையும் பாதிக்கின்றன.

இது தொடக்கம்

படம்
திறப்பு ரகசியத்திற்கான குறியீடுகள் மறந்தால் திரும்பவும் பெறுவதற்குச் சில தகவல்களைப் பதிவு செய்யும் பட்டியலில் கேட்கப்படும் கேள்வியாக இருப்பது உங்கள் பிறந்த நகரம் எது ?நான் நகரத்தில் பிறக்கவில்லை; கிராமத்தில் பிறந்தேன்; அதுவும் எங்கள் வலசலுக்கே பொதுவாக இருக்கும் திண்ணையில் பிறந்தேன் என்றெல்லாம் சொல்லமுடியாது.