கமல்ஹாசன்: இரண்டும் கலந்த கலவை
துன்ப உணர்வுகளும் இன்ப உணர்வுகளும் கலவையாக வெளிப்படும் நாடகத்தையோ அல்லது வேறுவகைப்பட்ட இலக்கிய வகையையோ அல்லது இன்ப துன்பங்களை ஒருசேரத் தரும் நிகழ்வையோ குறிக்கும் சொல்லாக துன்ப இன்ப நாடகம் என்றை சொல்லைச் சொல்லலாம். ஆங்கிலத்தில் டிராஜிக் காமெடி ( Tragic Comedy) என்று வழங்கும் இச்சொல் பிரெஞ்சு மொழியில் tragicomedie எனவும் இத்தாலிய மொழியில் tragicommedia என்றும் சொல்லப் படுகிறது. இவை அனைத்தும் லத்தீன் மொழிச் சொல்லான Tragicomoedia என்பதிலிருந்து வந்தவைதான். - American Heritage Talking Dictionary.