இடுகைகள்

இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்..

கல்வி கற்பதில் அதிக அக்கறை காட்டும் மக்கள் வாழும் மாவட்டங்கள் எவை? இந்தக் கேள்விக்கு மூன்றாவது இடத்தை எந்த மாவட்டம் பிடிக்குமோ எனக்குத் தெரியாது.முதலிரண்டு இடங்கள் எவை என நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். முதல் இடம் தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரிக்குத் தான். இரண்டாவது இடத்தை அதனை யொட்டி இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்துக்குக் கொடுக்கலாம்.

விபத்துகள் அல்ல; ஆபத்துகள்

படம்
            முகம் தெரிந்த மனிதர்களும் முகம் தெரிந்திராத மனிதர்களும் சந்திக்க நேரும்போது விவாதிப்பதற்கான நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று வாகன  விபத்துகள். தினசரி ஒன்றிரண்டு பேருந்து விபத்துகளைக் காணொளியாகக் காண்கிறோம்.  சராசரியாக மாதத்திற்கு இரண்டுக்கும் குறையாமல் பெரும் ரயில் விபத்துகளைக் காட்சி ஊடகங்கள் தங்கள் செய்திகளில் காட்டுகின்றன.  அடுத்த நாள் கூடுதல் விவரங்களாக இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைத் தருவதோடு இத்தகைய விபத்துகளின் வரலாற்றையும் தருகின்றன செய்தித்தாள்கள். பொறுப்போடு இருப்பதாக நினைக்கும் அதன்  ஆசிரியர்கள் ஆலோசனைகளைக் குறிப்பிட்டுத் தலையங்கம் ஒன்றை எழுதிவிட்டு அடுத்த பெரும் நிகழ்வொன்றிற்காகக் காத்திருக்கிறார்கள்.  

பேரங்காடிப் பண்பாடு

” அரிசி குழஞ்சு போயிராதுல்ல” ” இல்லங்க ; இது பழைய அரிசி,குழையாது” “ ரொம்பப் பழசுன்னா வேணாம்; வாடை வரும்” “ அய்யோ அவ்வளவு பழசு இல்லீங்க; வடிச்சுப் பாருங்க. மணக்கும்” அரிசிக் கடைக்காரருக்கும் வீட்டுத் தலைவிகளுக்கும் இடையில் நடக்கும் இந்த உரையாடலில் இடையில் புகுந்து “ வடிச்சுப் பார்க்கவா ; குக்கரில் அரிசியைப் போட்ட பிறகு சோத்த வடிக்கிற வேலை எங்கே இருக்கு” கணவர்கள் கேட்டால் சிரித்து விட்டுச் சொல்வார்.

சமூக இடைவெளிகள்

       இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரேயொரு வேற்றுமை நிகழ்வெளி மட்டும் தான். முதல் நிகழ்ச்சி நடந்தது சென்னையின் நகரப் பேருந்து நிலையம் ஒன்றில். இன்னொன்று திருநெல்வேலி பேருந்து நிலையத்தில். நிகழ்ந்த வெளிகள் பேருந்து நிலையங்கள் என்பதால், பேருந்து நிலையத்தைக் களனாக –நிகழ்வெளியாகக் கொண்ட ஓரங்க நாடகத்தின் இரு வேறு நிகழ்வுகள் என்று சொல்லலாம்.