இடுகைகள்

அழகிரி என்னும் அதிகார மையம்.

நவீன அரசியல் களம் மௌனமான அதிகார வேட்டை நடைபெறும் மைதானம் – இப்படிச் சொன்ன அறிஞன், அந்தக் கூற்றைப் பொதுவான ஒன்றாக - ஓர் உன்னத வாக்கியமாகக் கருதிச் சொல்லியிருக்க மாட்டான் என்றே நம்பலாம். குறைந்த பட்சம் தேர்தலுக்கு முன்னும் தேர்தலுக்குப் பின்னும் என இரு வேறு காலகட்டத்தில் மௌனத்தின் இடத்தை உத்தேசிக்காமல் எப்படிச் சொல்ல முடியும்.  தேர்தல்களின் காலம் மௌனங்கள் கலைக்கப்படும் காலம்; வசனங்கள் பேசப்படும் காலம்;ஒத்திகைகள் இல்லாமலேயே நேரடிக் காட்சிகள் அரங் கேற்றப்படும் காலம்.அரங்கேற்றங்கள் மேடைகளில் மட்டுமல்ல; தெருக்களை நாடியும், வீடுகளைத் தேடியும் வரும் காலம். ஆர்ப்பாட்டங்கள் அரங்கேறும் தேர்தல் அரசியலில் மௌனத்திற்கு ஏது இடம் எனக் கேட்டால், தேர்தல் அரசியலில் மௌனம் என்பது அதிகார வேட்டையின் கண்ணி வெடி எனச் சிலர் சொல்லலாம்.

மரணம் அல்ல; தற்கொலை

பதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிந்து, அமைச்சரவை பொறுப்பேற்பும் முடிந்து விட்டது. அமைச்சரவை அமைப்பதற்கு முன் நடக்கப் போவதாகப் பேசப்பட்ட அணிமாற்றங்கள், பேரங்கள், கொடுக்கல் வாங்கல்கள் என எதுவும் இல்லாமல் ஆக்கி விட்டன தேர்தல் முடிவுகள். இந்திய வாக்காளர்கள் அளித்துள்ள இந்த முடிவுகள் பலருக்கு நிம்மதிப் பெருமூச்சு. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக் குடும்பமான நேரு குடும்பத் திற்கும் இதுவரை இல்லாத பெருமகிழ்ச்சி. தோல்வியைத் தழுவிக் கொண்ட பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் கூட நிம்மதிதான். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்..

பண்பாட்டின் பெயரால்.. ..

படம்
ராமாயணம் என்னும் பேரிலக்கியம் எப்போதாவது அரசாங்கத்தின் ஆதரவு இலக்கியமாக இருந்ததா? என்று கேட்டால் இலக்கிய வரலாறு சரியாகத் தெரிந்தவர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். வால்மீகி எழுதிய ராமனின் கதையை வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதினார் கம்பர் என இலக்கிய வரலாறு கூறினாலும், கவி கம்பனின் இலக்கிய ஆளுமையால் புதுக் காப்பியமாக-பேரிலக்கியமாகக் கம்பனின் இராமாயணம் திகழ்கிறது என்பதை அதை வாசிப்பவர்களும் வாசிக்கக் கேட்பவர்களும் உணரக் கூடும். தமிழில் மட்டுமல்ல; ராமனின் கதையை மலையாளத்தில் எழுத்தச்சனாக இருந்தாலும் சரி, ராமசரித மானஸை எழுதிய துளசி தாசனும் சரி அதை ஒரு மூல இலக்கியமாகவே ஆக்கியிருக்கிறார்கள். எழுத்தில் வந்த ராமனின் கதைகள் மட்டுமல்ல; வாய்மொழி வழக்காறுகளில், அரங்கியல் பிரதிகளில் என எதிலுமே ராமனின் கதை தழுவலாக இல்லாமல் மூலப் பிரதியாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ராமனை எதிர்க் கதாநாயகனாக்கி ராவணனை நாயகனாக ஆக்கிக் காட்ட முயன்ற புலவர் குழந்தையின் இராவண காவியமே ஒரு வாசகனுக்குக் காவியத்தின் சுவையைத் தரவல்ல தாகவே இருக்கிறது.   ஒட்டு மொத்த இந்தியாவிலும் ராமாயணம் எப்போதும் அரசாங்க இலக்கியம

பாலா: அழிப்புக் கடவுளின் ஆதரவாளன்

படம்
தனி அடையாளம் கொண்ட தமிழ் சினிமா இயக்குநர்கள் தங்கள் படங்களைக் கவனத்திற்குரிய படமாக ஆக்குவதற்குப் பலவிதமான உத்திகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதைச் சாதாரணப் பார்வையாளர்கள் அறிவதில்லை. அவர்கள் ஒரு சினிமாவை அதன் எல்லைக்குள் நின்று பார்த்துவிட்டு அது தந்த களிப்பையும் கொண்டாட்டத்தையும் அந்த அரங்கிலேயே விட்டு விட்டுச் சென்று விடவே செய்கின்றனர். அப்படிப் பட்டவர்களே திரைப்படத்தின் பெரும் பான்மையான பார்வையாளர்கள் எனக் கருதும் இயக்குநர்கள் அவர்களுக்காக மட்டும் படம் எடுக்கிறார்கள். வெற்றி பெறும் குதிரையின் மீது பந்தயம் கட்டி யோகம் அடித்தால் தானும் வெற்றி பெற்ற இயக்குராகக் காட்டிக் கொள்வார்கள்.