இடுகைகள்

நீளும் வாரக்கடைசிகள்

படம்
ஒவ்வொரு கம்பத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்றித் தேசப்பற்றைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், தேச முக்கியத்துவம் வாய்ந்த யாராவது இறந்ததைக் கொடியை இறக்கி அடையாளப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தோடு இணையத்திற்குள் நுழைந்தபோது அப்படியொன்றும் நடக்கவில்லை என்பது புரிந்தது.  அரைக்கம்பத்தில் கொடியை இறக்கிப் பறக்கவிடுவது நினைக்கப்படும் நாளின் அடையாளம் என்பது புரிந்தது.

சுற்றுலாவுக்குள் கலைகளின் விரிவுகள்

படம்
நிலம், நீர்,  நெருப்பு புரொவிடென்ஸ், ரோட் தீவின் தலைநகரம் அந்த நகரின் மையத்தில் ஓடுகிறது வூனாஸ்க்வாடக்கெட் என்னும் சிற்றாறு. அதன் கரையில் இருக்கும் சட்டசபை மேடான பகுதியாக இருக்கிறது. அங்கிருந்து தொடங்குகிறது. நீர்வழிப் பூங்கா.பூங்காவின் முடிவில் தொடங்கும் நகர்மையத்திலிருக்கும் அந்தப் பெருஞ்சிலையிலிருந்து விழா நடக்கும் அந்த மூன்று குறுக்குப்பாலங்களும் இருக்கின்றன.

வெயில் நன்று; கடல்காற்று இனிது

படம்
தொடர்ச்சியான பனிப்பிரதேச வாழ்க்கை மஅனிதத்தோலின் நிறத்தை உருவாக்குவதில் பங்குவகிக்கிறது. வெள்ளைத்தோல் கொண்ட ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கக் கண்டத்து மனிதர்களுக்கும் வெள்ளைத்தோல் ஒருவரம் என்றால், அதற்குத் தேவையான வைட்டமின் தேடுவது ஒருவேலை. சூரியவெளிச்சமும் வெப்பமும் தொடர்ச்சியாகக் கிடைக்காமல் போகும் நிலையில் வைட்டமின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவது அவர்கள் சந்திக்கும் ஒருபிரச்சினை.

மழலையர் பள்ளிகள்.

படம்
கூட்டுக்குடும்ப அமைப்பைத் துறந்து தனிக்குடும்ப அமைப்புக்குள் நுழையவேண்டிய நெருக்கடியை உருவாக்கியது முதலாளித்துவப் பொருளாதாரம். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கருத்தியல் உருவாக்கத்தின் நல்விளைவுகளில் ஒன்று

எப்போதும் நின்றாடும் கள்வன்

படம்
2016 சட்டமன்றத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடந்திருந்தால் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஜனவரியிலேயே பயணத்தை உறுதிசெய்து பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டதால் மாற்ற முடியாது. ஒரு வாக்காளனாக வேட்பாளர்களையோ அவர்களது பிரதிநிதிகளாக உள்ளூர் பிரமுகர்களையோ சந்தித்திருக்க முடியாமல் போய்விட்டது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் ஓட்டுக்கு எவ்வளவு கொடுத்தார்கள்; எப்படி வாங்கினார்கள் என்பதும் தெரிந்திருக்கும். இந்தத்தேர்தலில் அந்த அனுபவம் கிடைக்கவில்லையென்றாலும் முந்திய அனுபவங்கள் கணிசமாக இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் பணம் விளையாண்டதைப் பார்த்திருக்கிறேன். பணத்திற்கும் வாக்களிப்பிற்குமிடையேயுள்ள உறவு அறச்சிக்கலும் தனிமனித விருப்பங்களும் இணைந்தவை. திருநெல்வேலி-11, கட்டபொம்மன் நகர் என அஞ்சல் முகவரி இருந்தாலும், வீடிருப்பது கிராமப்புறத்தில். கட்டபொம்மன் நகரில் முக்கால்வாசி கீழநத்தம் பஞ்சாயத்துக்குள் இருக்கிறது. அந்தப் பஞ்சாயத்து நாங்குனேரி தொகுதிக்குள் வருகிறது. இடைவெளி 100 மீட்டர் தான். பாளையங்கோட்டை தொகுதிக்காரனாக மாறி நகரவாசி ஆகிவிடலாம். கீழநத்தம் பஞ்சா...