புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்
இந்தக் கவிதையை மாணாக்கர்களிடம் வாசிக்க்க் கொடுத்தபோது அவர்கள் புரியவில்லை என்று சொன்னார்கள். புரியவில்லை என்றால் எது புரியவில்லை என்று கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. “ கவிதை, நவீனக் கவிதை புரியவில்லை” எனச் சொல்லும் பலரிடமும் ‘எது புரியவில்லை ‘ என்ற கேள்விக்குப் பதில் இருப்பதில்லை. மரபான முறையில் செய்யுளை அர்த்தப்படுத்துவதற்காகத் தேடிக் கண்ட்டையும் அருஞ்சொல் எதுவும் இக்கவிதையில் இல்லை . அப்படி இருந்தால் அதன் பொருளைச் சொல்வதன் மூலம் கவிதையை அர்த்தப்படுத்தலாம் . அப்படிப் பொருள் சொல்வது அல்லது அர்த்தப்படுத்துவதுதான் கவிதையின் புரிதலா? என்ற அடுத்த கேள்வி எழும்