இடுகைகள்

தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்

படம்
சுஜாதாவை நினைவுகூரும் விதமாக உயிர்மை பதிப்பகம் சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் நவீன இலக்கியப் போக்குகளை அடையாளப்படுத்தும் படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 2014 இல் அதன் ஆறாவது ஆண்டு நிகழ்வில் சிறுகதைக்கான விருதைப் பெற்றுள்ளது என் ஸ்ரீராமின் மீதமிருக்கும் வாழ்வு என்ற சிறுகதைத் தொகுப்பு. கதைகள் எழுதப் பெற்ற முறையிலும் சரி, அளவிலும் சரி ஒரு சிறுகதைத் தொகுப்பின் வரையறைகளைத் தவிர்த்துள்ள தொகுப்பு இது. மொத்தம் 80 பக்கங்கள். கூறு, மீதமிருக்கும் வாழ்வு, விசுவாசம், மூன்று மழைக்காலங்கள் என 4 கதைகள் . இந்தத் தொகுப்பை இந்த ஆண்டின் சிறந்த தொகுப்பாக நான் தேர்வு செய்யவில்லை. ஆனாலும் வாசிக்கத் தக்க / வாசிக்க வேண்டிய கதைகளைக் கொண்ட தொகுப்பு எனச் சொல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

திரள் மக்கள் பண்பாடு: வெகுமக்கள் சினிமா

படம்
திரைப்படங்களைத் திறனாய்வு செய்தலின் பிரச்சினைகள் தமிழக அரசுக்கு அதிகமாக வரி கட்டுகிற துறை திரைப்படத் துறையே.எனவே,அரசு அதற்கான சலுகைகளை வழங்கிட வேண்டும் எனப் பெருங்குரலில் கோருகின்றனர். திரைப்படத் தயாரிப்புக்கு ஆகும் செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால் அந்தக் கலையை யாராலும் காப்பாற்ற முடியாது. இது இன்னொரு கூட்டத்தின் குரல். திருட்டு விசிடி-க்களின் அச்சுறுத்தல்களினால் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது திரைப்பட உலகம். இது மற்றொரு கூட்டத்தின் குரல் இந்தக் குரல்களோடு சேர்ந்து சினிமாவைப்பார்க்கலாமா? ரசிக்கலாமா..? தீபாவளிக்கு வந்த ஐந்து படங்களில் ........... மட்டுமே நிற்கப் போகிறது. மற்றதெல்லாம் பணால்.. இது ஒருவகை விமரிசனக்குரல். 1) --------- 2) ---------3)--------- 4) ------ 5) ------ 6)------ 7)-------- 8)--------- 9)-------- 10)----- இது இந்த வாரத்து வரிசை. அடுத்தவாரம் வரும் புதுவரவோடு அடுத்தவாரம் சந்திப்போம். இதுவும் ஒருவிமரிசனமுறை. எத்தனை நாளைக்குத்தான் இதேமாவு..தேசம்... பாதுகாப்பு.. தீவிரவாதம்.மீட்டெடுப்பு.காதல், திருடந்போலீஸ்... ப்ளீஸ் விட்டுவிடுங்களேன். இந்தக் கூற்றும் விமரிச

சாபமாகிவிடும் வரம்

நாடகப் பிரதியின் பகுதிகளை அல்லது கூறுகளைப் பற்றிப் பேசும் விமரிசகர்கள் இருவேறு தொகுதிகளைக் கூறி விளக்குகின்றனர்.

கிராமங்களூடாகச் சில பயணங்கள்

படம்
போலந்தில் நானிருந்த இரண்டாண்டுக் காலத்தில் ஐரோப்பிய நகரங்களைப் பார்க்க வேண்டும் என நினைத்ததை விடக் கிராமங்களைப் பார்க்கவே அதிகம் விரும்பினேன்; நினைத்தேன். நகரங்கள் பலவற்றிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் அக்கறை கொண்டதைவிடக் கிராமங்கள் சிலவற்றைப் பார்க்க வேண்டும்; அங்கே சில நாட்கள் தங்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. போலந்தின் குறுக்கும் நெடுக்குமாக நான் மேற்கொண்ட கார்ப்பயணங்கள் அந்த ஆசையை மேலும் மேலும் அதிகமாக்கின