இடுகைகள்

மனிதநேயமும் நடப்பியல் வாதமும் :

மனிதநேயம் (Humanism) என்பது அடிப்படையில் தனிமனிதனின் கௌரவம் மற்றும் பெருமதியைக் குறித்த ஒரு தத்துவப் பார்வை. அதன் அடிப்படைக்கூறு , மனிதர்களுக்குள் செயல்படும் அறிவார்ந்த தன்மையையும் நல்லனவற்றிற்கும் உண்மைக்கும் பொறுப்பாக இருக்கும் குணங்களையும் கண்டறிந்து சொல்லுவது. இதன் தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு .

கற்பித்தல் என்னும் அலைக்கழிப்பு

படம்
மொழி எழுத்தில் வாழ்கிறதா? பேச்சில் வாழ்கிறதா? எனக் கேட்டால் மொழியியலாளர்கள் பேச்சு மொழிதான் ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. பேச்சு மொழி இல்லாமல் எழுத்து மொழியாக மட்டும் ஒரு மொழி நீண்டகாலம் உயிருடன் இருக்க முடியாது என்கிறார்கள். ஆனால் நமது அரசுகளும் அதற்கு ஆலோசனை சொல்லும் அறிஞர்களும் பேச்சு மொழியைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்து மொழியில் சிதைவு ஏற்படக் கூடாது எனக் கவனத்தோடு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள். பாண்டிச்சேரியைப் புதுச்சேரி என அம்மாநில அரசு மாற்றிப் பத்து ஆண்டுகள் ஓடி விட்டன. எல்லா இடங்களிலும் புதுச்சேரி என்றே எழுதப்படுகின்றன. விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் பெரும்பாலான பேருந்துகளிலும் புதுச்சேரி என எழுதப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் நடத்துநர்களின் அழைப்பு என்னவோ இன்னும் பாண்டிச்சேரி தான். பாண்டிச்சேரியைச் சுருக்கிப் ‘ பாண்டி…, பாண்டி… , பாண்டி..’ எனத் தாள லயத்துடன் அழைப்பார்கள். பாண்டிச்சேரியைப் பாண்டி எனச் சுருக்கியபோல புதுச்சேரியை எப்படிச் சுருக்கிச் சொல்வது எனக் கண்டுபிடிக்கவில்லை. பாண்டி-நேர்வழி என அழைக்கும் பேருந்தில் சென்றால் சீக்கிரம் போகலாம்

பெரிய கள்ளும் சிறிய கள்ளும்

படம்
வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகச் சேர்ந்த முதல் வாரத்தில் மாணவிகள் அளித்த விருந்தைச் சிறுவிருந்து எனக் குறித்து வைத்த நான், டேனுடா ஸ்டாசிக்கின் வீட்டில் நடந்த விருந்தைப் பெருவிருந்து என நாட்குறிப்பில் குறித்து வைத்துள்ளேன். காலத்தைக் காரணமாக்கிப் பெயர் சூட்டாத தமிழர்கள் இப்படித் தான் சொல்வோம். ஆனால் ஐரோப்பியர்களின் பெயரிடல் காலத்தைக் கவனத்தில் கொள்வது. அதனால் பெருவிருந்தை நீண்ட விருந்து ( Long Feast) எனச் சொல்வார்கள். ஔவையின் ”சிறிய கள்ளையும் பெரிய கள்ளையும்” ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்க முடியாமல் தவிப்பது ஏனென்று புரிந்து கொள்ளலாம். எழுதியிருந்தால், போலந்தில் இருந்த காலத்தில் பல்வேறு வகையான விருந்துகளில் பங்கேற்றேன் என்றாலும் இவ்விரண்டும் அடையாள விருந்துகளாக நினைவில் நிற்கின்றன.  

கதைகளாக மாறும் கவிதைக் கணங்கள்:ரவிக்குமாரின் கடல்கிணறு தொகுப்புக்கான முன்னுரை

படம்
நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், கற்பிதங்கள் என்ற சொற்களுக்கிடையிலான வேறுபாடுகளை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தால் வேறுபாடுகள் எதுவும் இல்லையோ என்று தோன்றும். எனக்குத் தோன்றியுள்ளது. வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றால் தமிழ் மொழியில் ஏன் இந்த மூன்று சொற்களும் உருவாக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்து கொண்டே இருக்கிறது.