கடந்த காலத்தை நினைத்துக் கொள்வது, எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு ஒருவழி. தனிமனிதர்கள் தங்கள் மனத்திற்குள் செயல்படுத்தும் இந்தச் செயலை, நிறுவனங்கள் கூடிப்பேசி விவாதித்துச் செய்கின்றன. 1991 -ல் தொடங்கப்பட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் தமிழியல் துறை (1996) ஆரம்பிக்கப்பட்டது. வெள்ளிவிழாவைக் கொண்டாடும் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறை 20 ஆண்டுகளைத் திரும்பிப்பார்க்கும் 3 நாள் கருத்தரங்கைக் கடந்தவாரம் - 2,3,4 தேதிகளில் நடத்தியது. இத்துறையின் முதல் பேராசிரியரான பேரா.தி.சு.நடராசனும்சரி, அவருக்குப் பின் பணியமர்த்தப்பட்ட . பேரா.தொ.பரமசிவன், பேரா.அ.ராமசாமி, பேரா.சு.அழகேசன், பேரா.ஞா.ஸ்டீபன், ஆகியோரது நூல்களும் கட்டுரைகளும் பல்கலைக்கழக எல்லையைத் தாண்டித் தமிழகக் கல்விப்புலத்திலும், இலக்கியத்தளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். இவர்கள் வெறும் பேராசிரியர்களாக மட்டுமல்லாமல் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளையும் விமர்சன நூல்களையும் எழுதியிருக்கின்றனர். இந்த ஆய்வுக் கட்டுரைகளும், விமர்சன நூல்களும் – தமிழகம் முழுவதும் கவனம் பெற்றவையாக இருக்கின்றன. இதனை மனதில் கொண்டு இ...