மந்தையிலிருந்து விலகத் துடிக்கும் இரண்டு ஆடுகள்
வசந்த பாலனின் காவியத்தலைவனையும்
மிஸ்கினின் பிசாசுவையும் முன் வைத்து
திரையரங்கிற்குச் சென்று சினிமாவைப் பார்ப்பது என்பது சிக்கலாகிக் கொண்டே வருகிறது. அதுவும் திருநெல்வேலி போன்ற கிராமீய மணம் மாறாத நகரத்தின் திரையரங்குகளை நம்பி ஒரு புதுப்படத்திற்குச் செல்வது பெரும் சிக்கலானது. படம் வெளியாகும் வெள்ளிக்கிழமை வேண்டாம் சனி, ஞாயிறுகளில் பார்க்கலாம் என்று நினைத்தால் கூடச் சங்கடமாகிவிடுகின்றது. மூன்று மாதங்களாகப் பேச்சிலிருக்கும் ஒரு படம் மூன்று நாட்களைத் தாண்டுவது முயல்கொம்பாகி வருகிறது. திரைப்படங்களைப் புறக்கணிக்கத் தொடங்கியிருக்கும் தமிழ்மனோபாவம் வரவேற்க வேண்டியதா? வருத்தம் கொள்ளவேண்டியதா? என்னும் பெரிய கேள்வி உருவாகியிருக்கிறது.
அஞ்சான், கத்தி, லிங்கா என்று பெயர் வைப்பதில் தொடங்கிப் பேச்சுகளாக மாற்றப்படும் வெகுமக்கள் ரசனைக்கான படங்களை முதல் ஆள், முதல் காட்சி, முதல் நாள் என முந்திச் சென்று பார்ப்பது ஒரு சாகச மனநிலை. அந்த சாகச மனநிலை வெறும் ரசிக மனநிலை மட்டுமல்ல;வெறியின் உன்மத்தம். இந்த உன்மத்தத்திற்கெதிரான மனநிலையை உருவாக்க வேண்டும் என நினைக்கும் அதன் எதிர்நிலைப் படங்களும் தயாரிப்பிலிருக்கும்போது தகவல்களாக அதன் பார்வையாளர்களை வந்து சேர்கின்றன. அந்த முன் தகவல்களின் அடிப்படையில் “இந்தப் படம் பார்க்கவேண்டிய படம்” என்ற முடிவை வெறியும் உன்மத்தமும் கொண்ட பார்வையாளர்களுக்கெதிரான போக்கில் பயணிக்கும் சமநிலைப் பார்வையாளர்கள் நினைத்துக் கொள்கின்றனர். அப்படி ஒருவர் நினைத்துக் கொள்ளக் காரணங்கள் இருக்கின்றன.
உருவாகியுள்ள சிக்கலும் நெருக்கடிகளும் வெகுமக்கள் ரசனைத்தளத்தில் இணைந்து கொள்ளும் பார்வையாளனுக்கல்ல. அதற்கெதிராக இயங்க விரும்பும் சமநிலைப் பார்வையாளன் சந்திக்கும் நெருக்கடி. இயக்குநர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையோடு காத்திருக்கும் சினிமாப் பார்வையாளனுக்கானது.வெகுமக்கள் பார்வையாளனின் காரணங்கள் நாயக நடிகனின் பாத்திர உருவாக்கமும், அவனது உடல் மொழியும் பேச்சுமொழியும் தரும் கொண்டாட்ட உணர்வுகள் என்றால் சமநிலைப் பார்வையாளனின் காரணங்கள் இயக்குநரின் பெயராகவும், அவர் உருவாக்க நினைக்கும் சொல்லாடலாகவும், அவற்றை உருவாக்கக் கையாளும் திரைமொழிகளும் கலையின் பொதுநோக்கமுமாக இருக்கின்றன.
சினிமா வணிகத்தின் அதிகாரவலைப் பின்னல்களால் உருவாக்கப்பட்டிருக்கும் நெருக்கடிகள் ‘முதல் நாள் முதல் காட்சியிலேயே நீ விரும்பிய படத்தைப் பார்த்துவிடு’ எனக் கட்டளையிடும் நெருக்கடியால் பார்க்க முடியாமல் போன படங்களின் பட்டியல்கள் என்னிடம் இருப்பது போலவே ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன. திரும்பவும் பார்க்கவேண்டுமென்றால் குறுவட்டுக் கடைகளை நாடவேண்டும் . அவை விற்கும் குறுவட்டுகள் திருட்டுத்தனமானது? வணிக உரிமை பெற்றதா? என்று ஆராய்ச்சிக்குள் இறங்க வேண்டும். இல்லையென்றால் இணையத்தில் கிடைக்கும் அலையலையாய் அலையும் படக்காட்சிகளைக் கண்டு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டும். இத்தகைய நெருக்கடியிலிருந்து தப்புவது எப்படி என்ற கேள்விக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்காமல் பார்த்துவைத்த இரண்டு படங்களையும் பற்றிச் சிலவற்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன்
தமிழ் நாடக வரலாற்றின் பின்னணியில் -ஜெயமோகன் வசனத்தில் என்ற புனைவான தகவலின் அடிப்படையில் வசந்தபாலனின் இயக்கத்தில் வந்த காவியத்தலைவனையும், பாலாவின் தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு என்ற புனைவல்லாத தகவலின் அடிப்படையில் இரண்டு படங்களையும் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து மூன்றாவது நாளிலேயே பார்க்க வேண்டியதாகிவிட்டது. இவர்களிருவரின் பேட்டிகளும் கலை இலக்கியம் பற்றிய புரிதல்களும் சமகால வாழ்க்கை பற்றிய அபிப்பிராயங்களும் எப்போதும் எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றபோதும் அவர்களின் படங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பதில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான். தமிழ்ச் சினிமா உலகத்தின் மந்தைத் தனத்தோடு தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற நிலைபாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள். தங்களுடைய முந்தைய படத்தின் தன்மைகளிலிருந்து மாறுபடும் தன்மையில் புதிய படம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு படத்தையும் புத்தம் புதியதாகத் தருவது சாத்தியமா? என்று கேட்டால் அவ்வளவு எளிமையானதல்ல என்று தான் பதில் கிடைக்கும். தன்னை - தனது கலை வெளிப்பாட்டைத் தனித்துவம் கொண்ட ஒன்றாக முன்னிறுத்த வேண்டுமென நினைக்கும் எந்தவொரு இயக்குநரும் முற்றிலுமாகப் புதிய படமாக ஒவ்வொரு படத்தையும் உருவாக்க முடியாது. தான் இயங்கும் தளத்தில் - கலைவடிவத்தில் தனக்கான சொல்முறையையும் கட்டமைப்பையும் கலைக்கோட்பாட்டையும் வெவ்வேறு பின்னணிகளில் தருவதில் கூட கலைஞன் தனது அடையாளத்தைத் தக்கவைக்க முடியும். அப்படித்தான் இயக்குநர் வசந்தபாலன் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், தனது அடையாளத்தைத் தக்கவைக்கிறார் என்பதை நேசமித்திரனின் கட்டுரையொன்றில் சமீபத்தில் வாசித்தேன். இயக்குநர் பாலாவும் எழுத்தாளர்களோடு இணைந்து வேலை செய்தபோதும் தன்னடையாளத்தையும் தக்கவைக்கிறார்.
நடிப்புக்கலைப் பின்னணி
காவியத்தலைவனைப் பற்றிய முன் புனைவான முன் தகவல்கள் அந்தப் படத்தைப் பார்க்க வரும் கூட்டத்தை அதிகரிக்கச் செய்யும் நினைத்திருந்தால் அந்த எண்ணம் தவறானது என்பதைப் படமும், பட வெளியீட்டிற்குப் பிந்திய விமரிசனச் சொல்லாடல்களும் உறுதியாக்கியுள்ளன. தமிழின் இசைநாடகக் காலகட்டத்துப் பின்னணியைக் கொண்ட வரலாற்றுப் படம் அல்லது தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாடகக் கலையின் பங்களிப்பைச் சொல்லும் படம் என்பதில் உறுதியாகக் கவனம் செலுத்தவில்லை. செலுத்தினால் படம் வணிக வெற்றி அடையாமல் போகும் சாத்தியங்கள் உண்டு என இயக்குநர் நினைத்திருக்கக் கூடும்.

இந்தப் படத்தின் பாத்திரங்கள் தமிழ் நாடக வரலாற்றில் ஆளுமைகளாக இருந்தவர்களின் சாயலில் மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. கடந்த காலத்தின் நாடகக்கலை மற்றும் சினிமாத்துறையிலிருந்து ஒரு பாத்திரத்திற்கொருவர் என்பதாக இல்லாமல் ஒன்றிரண்டு பேரின் குணாதிசயங்களைப் பிசைந்து உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அப்படிச் செய்ததுகூட வரலாற்றுப் படம் என்ற எண்ணம் உருவாகிவிடக் கூடாது என்ற நினைத்ததின் விளைவாக இருக்கலாம். அதனால் எல்லாக்காலத்திலும் மனிதர்களின் இயல்பு நிலையாக இருக்கும் இருப்புநிலையைக் காவியத்தன்மையோடு சொல்லிவிடும் முடிவுக்கு அவரையும் அவரோடு இணைந்த ஜெயமோகனையும் நகர்த்தியிருக்கக் கூடும் என்பதாகவே படத்தின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.
நிகழ்காலத்து மனிதர்களையும் நடிகர்களையும் போலவே நாடகக் கலையின் முன்னோடிக் கலைஞர்களும் பொறாமையோடும், விருப்பு வெறுப்புகளோடும் வாழ்ந்தார்கள் என்ற மாறாத மனித இருப்பின் குணம் ஒன்றை நாடக் கட்டமைப்பின் தொடக்கம், உச்சம், முடிவு என்னும் வடிவத்தில் சொன்ன படமாகவே ஆக்கப்பட்டிருந்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வசந்தபாலன் உருவாக்கி இணைத்துக் கொண்ட காட்சி ஜோடனைகளும், இசைக்கோர்வைகளும், நடிகர் தேர்வும் அதிகமும் ஒத்துழைக்கவில்லை என்றே தோன்றியது. குறிப்பாக நாயகத்தன்மை கொண்ட பாத்திரமாக உருவாக்கப்பட்டிருந்த - நடிகர் சித்தார்த் ஏற்ற பாத்திரமும், அவரது பாத்திரத்தோடு தொடர்புடைய ஜமீந்தார், அவரது மகள் என விரியும் காட்சிகளும் பார்வையாளர்களைப் படத்திலிருந்து விலக்கிக் கொண்டே இருக்கக்கூடியன.
படத்தின் காட்சிகளிலிருந்து பார்வையாளர்களைத் தூரப்படுத்தும் அம்சங்கள் அதிகம் கொண்ட இப்படத்தில் இரண்டு நடிகர்கள் தங்கள் நடிப்பின் மூலம் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தும் மாய வித்தையைச் செய்து கொண்டே இருந்தார்கள் என்பதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஒருவர் நடிகர் நாசர்; இன்னொருவர் பிருத்விராஜ். சங்கரதாஸ் சுவாமிகள் என்பதைவிட பாய்ஸ் கம்பெனி காலத்து நாடகக்கம்பெனி ஆசிரியர் ஒருவரின் ஆளுமையையும் சகிப்பு, ஏற்பு, தவறுதலான முடிவெடுத்தல் என்னும் குணங்களோடு கூடிய ஒருவராக அவரது பாத்திரம் வார்க்கப்பட்டிருந்தது. படத்தின் பாதியில் அந்தப் பாத்திரம் மரணம் அடையும்வரை திரையில் தோன்றும் நடிகர் நாசரின் இருப்பே திரையின் அழகியலாகவும் நடிப்பின் வியாபகமும் நிறைந்திருப்பதைப் பார்வையாளர்கள் உணர்ந்திருக்கக் கூடும். அவரை மையப்படுத்தியே காமிரா அசையாமல் படம் பிடித்திருந்தது என்பது ஒரு காரணம் என்றாலும், அப்படியான அசைவுகளோ, நகர்வுகளோ தேவையில்லை என்ற நிலையை உருவாக்குவதுதான் நடிகரின் திறன்.

திரையின் முழுமையைத் தன் வசப்படுத்தும் ஆற்றலை தேவர் மகன், குருதிப் புனல், இம்சமை அரசன் 23 ஆம் புலிகேசி போன்ற படங்களில் சாத்தியப்படுத்தியவர் தான் நாசர் என்றாலும் காவியத்தலைவனில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஒப்பனைகளும் உதவவில்லை; ஆனால் உடைகள் உறுத்தவில்லை. எழுதித் தரப்பட்ட வசனங்கள் விலகி நிற்கின்றன. ஆனால் பேச்சுமொழியோடு சேரும் உடல்மொழி நடிப்புகுறித்துக் கற்க விரும்புபவர்களுக்குப் பாடங்களாகியிருக்கின்றன. நாசர் என்னும் நடிப்புக்கலைஞனின் திறமையைப் பாராட்ட விரும்பும் காவியத்தலைவனைப் பார்க்காமல் விட்டதற்காக வருத்தப்படவே செய்வார்கள்.
நாசர் அளவிற்கில்லையென்றாலும் பிருத்விராஜின் நடிப்பையும் பாராட்ட காவியத்தலைவனை நீங்கள் பார்த்திருக்கவே வேண்டும். படைப்பாக்க நடிகராக இல்லையென்றாலும் சொல்லித் தந்ததைச் செய்யும் பயிற்சிபெற்ற நடிகனான தனக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் மரியாதையும் ஏற்பும் கிடைக்காதபோது ஏற்படும் பொறாமை உணர்வைக் கச்சிதமாக வெளிப்படுத்திய பிருத்விராஜ், நாசரின் பாத்திரம் இருந்தவரை திரையைத் தன்வசப்படுத்த முடியாமல் தவிக்கிறார். பிந்திய காட்சிகளில் பிருத்விராஜ் தனது விசுவரூபத்தைக் காட்டியிருக்கிறார். சித்தார்த் அதைச் செய்ய முடியாமல் தவிக்கும் தவிப்பாக இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கிறார். அந்தப் பாத்திரத்திற்கு அவரது உடல்மொழியும் குரலும் எவ்விதத்திலும் பொருத்தவில்லை. வேதிகாவின் அழகும் இளமையும் பாவனைகளும் நளினமாக இருந்தபோதிலும் பாத்திரத்தை உள்வாங்கிய ஒன்றாக வெளிப்படவில்லை. நாடகக் கலையின் பின்னணியென்பதைவிட தமிழ் நடிப்புக்கலையின் பின்னணியாகப் பார்த்திருக்க வேண்டிய காவியத்தலைவனைத் தமிழ்ச் சமூகம் பார்க்காமல் விலக்கியதைப் பெரும்பிழை என்றே நினைக்கிறேன். அப்படி விரட்டியடித்ததில் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்களுக்கும் பங்குண்டு என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
குற்ற மனங்களை உருவாக்குவது
இயக்குநர் மிஸ்கினின் படங்களின் பொதுவான வார்ப்பு அல்லது அமைப்பு குற்ற மனங்களின் உருவாக்கம் என்ற ஒற்றை வரிகளில் அடங்கிவிடக்கூடியது. அவரது முதல் படமான சித்திரம் பேசுதடி தொடங்கி இப்போது வந்துள்ள பிசாசு வரை இதைத் தான் படத்தின் கருத்தியலாக ஆக்கிவருகிறார். நாயக மனத்தையும் அவர்களின் சாகசங்களையும் மட்டுமே உருவாக்க வேண்டும் என நினைக்கும் தமிழ்ச் சினிமா இயக்குநர்களிலிருந்து மிஸ்கினைப் பிரித்துக் காட்டும் அடிப்படை அதுதான். குற்றமனம் கொண்ட பாத்திரங்களைப் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களும் குற்றமனம் கொண்டவர்களாக ஆவார்கள்; தவறுகளைச் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இக்கலைக் கோட்பாடு நம்பிக்கை கொண்டது. அத்தோடு குற்ற மனப்பான்மை கொண்ட பாத்திரங்களை ஏற்கும் தன்னிலைகள் குற்றங்களையும் குற்றவாளிகளையும் சகிக்காது என்ற நிலைப்பாடும் இந்தக் கோட்பாட்டின் பின்னிருக்கும் நோக்கங்கள்.
மிஸ்கினின் கலைக்கோட்பாடும் அது சார்ந்த நம்பிக்கையும் உலக இலக்கியப் போக்கின் முக்கியமான கூறு என்றாலும், அதனைப் படைப்பாக்க நினைக்கும் மிஸ்கின் எப்போதும் ஒரு அந்நியத்தன்மையோடு கூடிய கூற்றுமுறையையே பின்பற்றுகிறார். ஒன்றிப்பின் வழியாகவே சினிமாவை ரசித்துப் பழகிவிட்ட தமிழ் வெகுமனமும் ரசனையும் விலகல் தன்மை கொண்ட நவீன சினிமாவின் கூற்றுமுறையை ஏற்கத்தயங்குகிறது. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே போன்ற நேர்கோட்டுக் கதைசொல்லல் படங்களை ஓரளவு ஏற்ற பார்வையாளத்திரள் முகமூடி, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களை முற்றாக நிராகரித்ததின் காரணங்களை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். அதை மிஸ்கினும் புரிந்துகொண்டவராகவே இப்போது வந்துள்ள பிசாசு படத்தில் வெளிப்பட்டிருக்கிறார்
எளிமையான நேர்கோட்டில் கதையைச் சொல்லிவிட வேண்டும் என்ற தவிப்பு அவரிடம் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் சொல்ல நினைத்ததைப் பிசாசு என்னும் அமானுஷ்யத் தன்மையின் வழியாகச் சொல்லுதல் என்னும் சாகசம் இதற்குள் இருக்கிறது என்ற எச்சரிக்கையையும் கவனமாகக் கையாண்டிருக்கிறார். அமானுஷ்யமும் திகிலும் இணைந்து கொள்ளும்போது உண்டாகும் குரூரம், அச்சம் ஆகியன சரியாகக் கலக்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு அதற்குள் சேர வேண்டிய எள்ளலும் தன்னிரக்கமும் பிசைந்து தரப்பட்ட படமாகப் பிசாசு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே அறிமுகம் இல்லாத நடிகர்களோடு தனது திரைக்கதையின் மீது நம்பிக்கை வைக்கும் மிஸ்கின் போன்ற திரைக்கலைஞர்கள் தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள். தமிழ் நிலம் மற்றும் சமூக உளவியல் பின்னணிகளை முற்றாகப் பின்பற்றாத படங்களையே தனது சினிமாவாகத் தந்து கொண்டிருக்கும் மிஸ்கின் போன்றவர்கள் விதம்விதமான சினிமாக்களைத் தமிழில் உருவாக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
வீடு வெறும் குடியிருப்பு மட்டுமல்ல. நமது மனதின், அழகியலின் ஆசையின் வெளிப்பாடுகளும் கூட. அதனை அவ்வப்போது வண்ணவண்ணத் தோரணங்களால் பண்டிகைக் காலத்தில் கவனப்படுத்தும் வேட்கையும் ஆசையும் எல்லோரிடத்திலும் இருக்க வேண்டும் என நினைப்பது தவறானதல்ல. அந்த நினைப்போடு இயங்கும் வசந்தபாலனும் மிஸ்கினும் கவனிக்க வேண்டியவர்கள்; காப்பாற்றப்பட வேண்டியவர்கள். அவர்கள் காட்சிப்படுத்துவதைக் கண்டு களிப்பதுதான் பார்வையாளர்களின் பங்களிப்பாக இருக்க முடியும்.

கருத்துகள்