படம் வருவதற்கு முன்பாகப் பலவிதமான எதிர்பார்ப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிட்டு படத்தை வெளியிடுவது இப்போது ஓர் வியாபார உத்தியாக இருக்கிறது. பாலாவின் பரதேசியும் அப்படியான உத்திக்குப் பிறகுதான் திரையரங்குகளுக்கு வந்தது. போலந்தின் தலைநகர் வார்சாவில் அந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு இல்லை. இணையங்களில் கிடைக்கும் இணைப்புகள் வழியாகத்தான் பார்க்க முடிந்தது. நான் பார்த்து முடிப்பதற்குள் பலவிதமான விமரிசனங்கள் அந்தப் படத்தை நோக்கி எழுதப்பட்டன. நேர்மறையான விமரிசனங்களை விடவும் எதிர்மறை விமரிசனங்களே அதிகம் வந்தன. கதை உருவாக்கம், திரைக்கதை ஆக்கம், வசனம் எழுதுபவரின் பின்னணி, படப்பிடிப்பு நிகழ்வுகள், பாடல் வெளியீட்டு நிகழ்வு எனப் படத்துக்கு வெளியே இருக்கும் பலவற்றைப் பற்றிய முன் அபிப்பிராயங்களோடு எழுப்பப்பட்ட விமரிசனங்களைத் தாண்டி அந்தப் படத்தின் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டும் என்பதால் விரிவான விமரிசனம் ஒன்றை லண்டனிலிருந்து வரும் “எதுவரை- உரையாடலுக்கான வெளி ” என்னும் இணைய இதழில் எழுதியுள்ளேன். படத்தைப் பற்றியும் படத்தைச் சுற்றி எழுப்பப்பெற்ற விமரிசனங்கள் பற்றியும் அந்தக...