முன்னுரை: பல்கலைக்கழகப்பட்டங்களுக்கான கற்கையாக ஆவதற்கு முன்பே இயல், இசை, நாடகம் என மூன்றாக அறியப்பட்டது. ஐரோப்பியக் கற்கைமுறை அறிமுகமாகிப் பல்கலைக்கழகக் கற்கைமுறைகள் வளர்ந்த நிலையில் முத்தமிழ் என்ற தமிழ்ப்பரப்பு கலைப்புலத்தையும் அறிவியல் புலத்தையும் தனதாக்கத் தொடங்கி ஐந்தமிழ் என அறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ் ஆய்வு, தமிழியல் ஆய்வாக மாறியது. பல்கலைக்கழகக் கற்கைகளில் பட்டப்படிப்பு, மேல்பட்டப்படிப்பு தாண்டி ஆய்வுப்பட்டங்களுக்கும் தமிழ் உரியதானது. வகுப்பறைப்படிப்பாக இல்லாமல் முனைவர் பட்டத்திற்கும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கும் ஆய்வுப் பொருண்மைகளும் ஆய்வுத் தலைப்புகளும் தேவைப்பட்டன. இத்தேவைகளின் பெருக்கம் தமிழாய்வு என்னும் மரத்தின் இருபெரும் கிளைகளாக இருந்த மொழி, இலக்கியம் என்ற இரண்டையும் எப்படி விரிவாக்குவது என்ற கேள்விக்குள் நகர்த்தின. இந்நகர்தலின் பின்னணியிலும் மேற்கத்தியக் கற்கைமுறைகளும் சிந்தனைப்பள்ளிகளுமே செயல்பட்டன. மொழியைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் அவை தந்த புதிய கருத்தியல்கள், சார்புபாடங்களையும், துணைப்பாடங்களையும் உருவாக்கித் தந்தன. புதிதுபுதிதாகக் கண்டறியப்ப