இடுகைகள்

முருகபூபதியின் சூர்ப்பணங்கு: சோதனைப் பேய் பிடித்தா(ட்)டும் மனிதர்கள்

படம்
முருகபூபதியின் மிருக விதூஷகம் நாடக நிகழ்த்தப்பட்டுச் சரியாக ஓராண்டு முடிந்துவிட்டது. 2010, ஜுனில் கோவில்பட்டி, மதுரை, திருவண்ணாமலை, சென்னை என ஒரே மூச்சில் அடுத்தடுத்த நாட்களில் மேடையேற்றினார். சென்னையில் எலியட் கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் நடனக் கலைஞர் சந்திரலேகாவின் பயிற்சி அரங்கத்தளத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது அடுத்த நாடகம்; சூர்ப்பணங்கு. அதே வரிசையில் அதே நகரங்களில் அதே மேடைத்தளங்களில். 2011 ,ஜூலையில் 7,8,9,10 தேதிகளில். மிருகவிதூஷகம் டெல்லியில் தேசிய நாடகப்பள்ளியின் நாடகவிழாவில் பங்கேற்றது போல சூர்ப்பணங்கும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டது.

நீயா நானாவில் அன்னா ஹசாரேயும் நானும்

படம்
விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் தொழில் நுட்பக் கல்வி X சமூக அறிவியல் கல்வி என்ற தலைப்பிலான விவாதத்தின் விருந்தினராக அழைக்கப்பட்ட நான் அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவைப் பற்றிய விவாதத்திலும் கலந்து கொள்ள நேர்ந்ததைத் தற்செயல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்.

திக்குத்தெரியாத காட்டில்…

இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் நுழைய உள்ளவர்களில் ஏறத்தாழப் பாதிப்பேர் தமிழ் வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒற்றைச் சாளர முறையின் வழியாகச் சேர உள்ள மொத்த மாணாக்கர்களில் 43.5 % பேர் தமிழ்வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 26.34 சதவீதம் தான்.  

குதிரை முட்டை:பார்வையாளர்களின் தரவேற்றுமையை அழிக்கும் நாடகம்

மேற்கத்திய நிகழ்த்துக்கலைகளின் தயாரிப்பு மற்றும் நிகழ்த்து முறைகளுக்கும், இந்திய நிகழ்த்துக் கலைகளின் தயாரிப்பு மற்றும் நிகழ்த்து முறைகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதைப் பலர் எழுதியுள்ளனர்; பேசியுள்ளனர்; விளக்கியும் காட்டியுள்ளனர். அத்தகைய வேறுபாடுகள் பார்க்கும் முறையிலும் பார்வையாளர்களாக இருந்து ரசிக்கும் முறையிலும் கூட இருக்கின்றன என்றே தோன்றுகின்றது. நிகழ்த்துக்கலைகளின் இந்தியப் பார்வையாளர்கள் புதியன பார்த்து திகைப்பவர்களோ, அதன் வழிக் கிடைக்கும் அனுபவம் அல்லது சிந்தனை சார்ந்து குழப்பிக் கொள்பவர்களோ அல்ல.