சமயங்களின் உள் முகங்கள்
ஒரு முன் குறிப்பு: நானும் ஜெயமோகனும் பரிமாறிக் கொண்ட இந்தக் கடிதப் போக்குவரத்து சரியாக ஒருவருடத்திற்கு முந்தைய நிகழ்வு. இக்கடிதங்களில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் எங்கள் இருவருக்குமானவையாக இல்லை; பொதுவில் வைக்கப்பட வேண்டியவை என்று அப்போதே தோன்றியது என்றாலும் பதிவேற்றம் செய்யவில்லை; காரணம் இருவருக்கும் எதோ பிரச்சினை எனக் கருதிக் கொள்ளும் சூழல் தான் காரணம். தமிழில் அறிவார்ந்த விவாதங்கள் தனி நபர் பிரச்சினைகளாகப் பார்க்கப்படும் ஆபத்து இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இப்போது வலைப்பதிவில் ஏற்றுகிறேன்.