திரைப்பிம்பங்கள் பேசும்மொழி, அம்பிம்பங்கள் உலவும் வெளி, பிம்பங்களின் தன்னிலையையும் பிறநிலையையும் கட்டமைக்கும் வாழ்நிலை ஆகிய மூன்றுமே ஒரு திரைப்படத்திற்கான அடையாளத்தை உருவாக்கக் கூடியன. இம்மூன்றும் ஓர்மை கெடாமல் அமையும் சினிமாவே தனித்த அடையாளமுள்ள சினிமாவாக வகைப்படுத்தத்தக்கது. நமது சினிமாக்காரர்கள், அவர்கள் உருவாக்கும் திரைப்படங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க நினைத்து அதன் விளம்பரங்களில் ‘தமிழ், தமிழர்கள்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் ”தமிழ்ச் சினிமா” என்பதின் அடையாளத்தை எதனைக் கொண்டு இயக்குநர் உருவாக்கியிருப்பார் என்ற கேள்வியோடு தான் படம் பார்க்கச் செல்வேன்; கவனமாகச் சினிமாவைப் பார்த்துப் பேசும் ஒவ்வொருவரும் அப்படித்தான் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் பார்வையாளனுக்கும் முழுத் திருப்தி அளிக்கும் ஒரு சினிமாவை நமது இயக்குநர்கள். பல நேரங்களில் தருவதில்லை. அப்படிச் சொல்லிக் கொள்ளாமலேயே சில இயக்குநர்கள் அசலான தமிழ்ப் படங்களைத் தந்துள்ளனர். இப்போது வசந்தபாலனின் அரவான் பட விளம்பரம் ”தமிழ்” என்ற பதத்தை உபயோகித்துக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆகவே இப்படம் அசலான தம