மழலையர் பள்ளிகள்.

கூட்டுக்குடும்ப அமைப்பைத் துறந்து தனிக்குடும்ப அமைப்புக்குள் நுழையவேண்டிய நெருக்கடியை உருவாக்கியது முதலாளித்துவப் பொருளாதாரம். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கருத்தியல் உருவாக்கத்தின் நல்விளைவுகளில் ஒன்று

பெண்களின் உரிமைகள் பற்றிய உணர்தல் நிலை. வீட்டு வேலைகளோடு முடங்குப் போகும்படி வலியுறுத்திய நிலமானிய அமைப்புக்கு மாற்றாக உருவான முதலாளித்துவம் பெண்களையும் சம்பளம்பெறும் பணிகளுக்குத் தயார்படுத்தியது. பெண்ணும் ஆணும் சம்பளம் பெறும் வேலைக்குச் செல்லும் சமூகக் கட்டமைப்பு உருவாக்கத்தோடு உருவானது மழலையர் பள்ளிகள்.  
இந்தியாவிலும் அவை நிரம்பிக் டக்கின்றன.அன்னையின் அன்பையும் சகமனிதனோடு பழகவேண்டிய கட்டாயத்தையும், ஒவ்வொருவரின் தனித்தன்மையை அங்கீகரிக்கவேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதுதான் மழலையர் பள்ளிகளின் முதல் நோக்கம். இந்நோக்கத்தோடு இணைந்தது கூட்டாக விளையாடுதலும் கூட்டாகப் பணிசெய்தலும். மழலையர் பள்ளிகளின் மூன்றாவது கடமைதான் எழுத்தும் எண்ணும் கற்றுத்தருதல். சிறுவயது முதலே கற்பித்தலில் அக்கறையோடு இருக்க்வேண்டும்.இந்தியாவில் குழந்தைகளைப்

பராமரிக்கும் பணியைச் செய்கின்றன மழலையர் பள்ளிகள். மாணவர் சேர்க்கைக்குக் கட்டுப்பாடு கிடையாது.
குழந்தைகளுக்குப் போதிய இடவசதி கிடையாது. ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சி கிடையாது. பெற்றோர்களின் வேலைநேரத்தில் பார்த்துக்கொள்ளும் 
பொறுப்பை எடுத்துக்கொண்டு அதற்குக் கூலிபெறும் நிறுவனங்களாக இருக்கின்றன.மழலையர் பள்ளிகளுக்கான அடிப்படை நோக்கத்தை உணர்ந்தவர்களாக இருப்பதில்லை. யோகா, கராத்தே, இசை வகுப்புகள் என அனைத்தையும் பாடத்திட்டத்தின் பகுதியாக மாற்றி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பணம் வசூல் செய்கிறார்கள்.இந்தியாவின் மழலையர் 
பள்ளிகளை நடத்தும் பலரும் அதனைப் பணம் காய்க்கும் மரமாக நினைக்கின்றனர்.
நேற்று என் 3 வயதுப் பேரன் முகிலன் பயிலும் பாஸ்டன் நகரத்துத் தெற்குக்கரைக் கானகப் பாதுகாப்பு - கற்பனைக் கலையகம் (SOUTH SHORE CONSERVATORY -Imagine Arts) என்னும் பள்ளிக்கு மனைவியோடு போனேன். பள்ளிக்கு முன், மழலைக்கல்விக்கு முன், மழலைக் கல்வி 
என மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தும் ஒரு கலையகம். முகிலன் பள்ளிக்கு முன் என்ற நிலையில் வாரத்தில் செவ்வாய், வியாழன் என இரண்டு நாள் மட்டுமே போய்வருகிறான். ஆனால் பள்ளி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரே இடத்தைப் பலருக்கும் பயன்படும் விதமாக மாற்றிக் கொள்கிறார்கள். மழலையரோடு மழலையராகைக் கலந்துவிடும் ஆசிரியைகள். விளையாட்டுக்கருவிகள், வண்ணந்தீட்டிகள், படங்கள் நிரம்பிய புத்தகங்கள், விளையாட்டு மைதானம் என அந்தச் சூழலில் பொருந்திப்போய்விட்டுத் திரும்புகிறது குழந்தை.
பள்ளியின் அலுவலகப் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தபோது சொன்னாள். லாபநோக்கமற்று நடக்கும் இந்தப் பள்ளிக்கட்டிடமே லாபநோக்கத்தோடு இசைவகுப்புகள், யோகா வகுப்புகள், ஓவிய வகுப்புகள் என வேறு நேரங்களில் நடக்கும் இடமாக இருக்கிறது என்றால். ஒன்றைப் பலவாகப் பயன்படுத்தும் நோக்கத்தால், மாணவர்களின் கல்விக்காகப் பணம் வசூலிப்பது குறைவுதான் என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்