தமிழக அரசியல் : கனவுலகவாசிகளின் கனவுலகம்
தமிழ்த் திரைப்பட உலகம் ஒரு கனவுத் தொழிற்சாலை, தமிழ்ச் சமூகத்திற்கு கனவுகளை உற்பத்தி செய்யும் அந்தக் கனவுலகவாசிகளுக்கே இன்னொரு கனவுப் பரப்பாக ஆகிக்கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் அரசியல் வெளி. அந்த ஆசை யாருக்குத்தான இல்லை? தமிழ்நாட்டின் அரசியல் பிரமுகராக ஆக வேண்டும் என்ற ஆசை சினிமாவிற்குள் இருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது. அதன் உச்சக்கட்டமாகத் தமிழ்நாட்டின் முதல்வராக ஆக வேண்டும் என்ற ஆசை நாயக நடிகா்களின் ஆசையாக மலா்ந்துவிடுகிறது. இப்படிச் சொல்வதுகூடச் சரியில்லை. அது ஒரு கனவாக மாறிக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும், நாயக நடிகா் விஜயகாந்த் இப்பொழுது தனது கனவுகளுக்கு வண்ணம் தீட்டத் தொடங்கியுள்ளார்.