ஜெயந்தன் விருது விழா
நிறைவில் ஒரு நாடகம் தொடக்கத்தில் ஒரு குறும்படம் கலையின் ஓர்மை என்பது தொடக்கத்தை எப்படி முடிக்கிறது என்பதில் இருக்கிறது. அதுபோலவே ஒரு கலைசார்ந்த நிகழ்ச்சிகளையும் நல்ல ஓர்மையுடன் அமைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தொடக்கமும் முடிவும் எப்படி இருக்க வேண்டும் எனக் கணித்துத் திட்டமிடுவார்கள். அப்படியானதொரு திட்டமிடல் “ஜெயந்தன் விருது வழங்கும் விழாவில் இருந்தது. வழக்கமான வரவேற்புரை, நன்றியுரையைத் தாண்டி இருந்தன. ஆனால் மொத்த நிகழ்வையும் உரைகளாகத் திட்டமிடாமல் பார்வையாளர்களுக்கு ஜெயந்தனின் எழுத்துகளைக் குறும்படமாகவும், நாடக நிகழ்வாகவும் தரவேண்டும் எனத் திட்டமிட்டிருந்தது மொத்த நிகழ்வுக்கும் ஒருவித ஓர்மையை உருவாக்கித் தந்திருந்தது.