இடுகைகள்

மதுரை நினைவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மே நாள் - மாணவப்பருவ நினைவுக்குறிப்பு

படம்
முதுகலை படித்தபோது இதழியல்,ஒப்பீட்டிலக்கியம், நாடகவியல், நாட்டுப்புறவியல் என நான்கு விருப்பப்பாடங்கள் இருந்தன. அதில் எனது விருப்பப்பாடம் இதழியல். அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் இதழியல் பாடத்திற்கென இளம் விரிவுரையாளராகத் தமிழ்- இதழியலில் முனைவர் பட்டம் செய்திருந்த அ.சாந்தா அவர்கள் இருந்தார். மிகுந்த ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் வழி நடத்துவார். எனக்கு ஓராண்டுகளுக்கு முன்னால் அதே விருப்பப்பாடத்தைத் தேர்வுசெய்த முன்னோடிகள் ஆர்.பாலகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன் . அவர்களே இந்தப் பாடத்தை விரும்பிப் படித்து என்னைத் திருப்பி விட்டவர்கள். இந்தியக் குடிமையியல் பணித்தேர்வை ஆர்.பாலகிருஷ்ணனுக்கு அறிமுகம் செய்து வெற்றிபெற்றவராக்கியதே அந்த இதழியல் விருப்பப்பாடம் தான். நான்கு பருவத்தில் மூன்று தாள்கள் உண்டு. கடைசிப்பருவத்தில் செய்முறைப் பயிற்சிகளே அதிகம் இருக்கும்.

சேவாலயத்தோடு சில நினைவுகள்

படம்
சீடு அமைப்பின் மார்கழிக்கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாகப் பிரபாகர் இயக்கிய ‘மனைவியர் பள்ளி’ நாடகம் (மோலியரின் மூலத்தைத் தழுவிய நாடகம்)  ஷெனாய் நகரில் இருக்கும் சேவாலய வளாகத்தில் நடக்கிறது என்பதைக் கூகுள் வரைபடத்தோடு அனுப்பி வைத்தனர் பிரபாகரும் கார்த்திக்கும்.  பழைய அண்ணா பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் நகரப்பேருந்தில் ஏறினால் ஷெனாய் நகரில் இறங்கிக் கொள்ளலாம். 

படம் தரும் நினைவுகள்-2

படம்
அமெரிக்கன் கல்லூரியின் முதன்மைக் கட்டட மாடியில் உள்ள மேடையில் எடுக்கப்பட்ட படம்(1989)  எனது இயக்கத்தில் மேடை ஏறிய முதல் நாடகம்,  ஞான.ராஜசேகரனின் ‘வயிறு’.  நாடகத்தின் மேடையேற்றத்திற்குப் பின் பார்வையாளர்கள் எல்லாம் வெளியேறியபின் நடிகர்களும்,   பின்னணி வேலை செய்தவர்களுமாக இப்படத்தில் இருக்கிறோம்.

படங்கள் வழி மதுரை நினைவுகள்

படம்
மதுரை என்னுடைய நகரமென்று இப்போதும் சொல்கிறேன். அந்நகரில் இருந்த ஆண்டுகள் குறைவுதான். மாணவனாக விடுதிகளில் 6 ஆண்டுகள் தங்கியிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியில் வாலஸ் விடுதியிலும் வாஸ்பன் விடுதியிலும் 4 ஆண்டுகள்.  என்னிடம் இருக்கும் புகைப்படங்களிலேயே பழைய படம் இது-1980. அமெரிக்கன் கல்லூரி விழாவில் பரிசு வாங்கும்போது எடுத்த படம். பரிசு தருபவர் ஒரு நீதிபதி. பெயர் நினைவில் இல்லை. எண்பதுகளின் பெல்பாட்டம் பேண்ட். இரண்டு காதுகளையும் மறைக்கும்படியாக முடிவளர்த்து, அகலமான அடிப்பாகம் கொண்ட கால்சட்டைகள் தரையைக் கூட்டிப்பெருக்க நடந்த காலம்.  

அமெரிக்கன் கல்லூரி: அலையும் நினைவுகள்

படம்
எங்கெங்கோ முட்டி மோதினாலும் மீண்டும் மீண்டும் நுழைவாயிலை நோட்டம் விடத் தவறப் போவதில்லை. இந்த வரிகள் 1980 ஆண்டின் கல்லூரி ஆண்டு மலரில் எழுதிய நீண்ட கவிதையின் சிலவரிகள். கவிதைக்கான தலைப்பு: உன்னைப் பிரிய முடியாமல் . இன்று இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து போய்விட்டன. என்றாலும் ஆண்டிற்கு இரண்டு தடவைக்குக் குறையாமல் கல்லூரிக்குள் நுழைந்து ஒரு சுற்றுப் போட்டுவிட்டு வருவதை நிறுத்தி விடவில்லை. காரணம் எதுவும் இல்லையென்றாலும் - அந்தவழியாகப் போக நேர்ந்தால் உள்ளே போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கையில் இருக்கும் புத்தகத்தைத் திறந்து படித்து விட்டுத் தான் வருவேன்.