இலங்கை ஜனாதிபதி தேர்தல்- பத்து நாட்களுக்கு முன்(12/09/24) தேர்தல் தேதி /21/09/724 ஈழப்போராட்டத்தின் வழியாகவே இலங்கையைக் கவனித்த பலருக்கும் இதுதான் நிலைமை என்று நினைக்கிறேன். நானும் இலங்கைத் தமிழ்ப் புனைவு எழுத்துகளை வாசித்த அளவுக்கு இலங்கை அரசியலின் உள்ளோட்டங்களை அறிந்துகொள்ளுதலில் ஆர்வம் காட்டியதில்லை. காட்டிய ஆர்வம் கூடப் பூகோள அரசியலில் சின்னஞ்சிறிய நாடொன்றை வல்லாதிக்கம் செய்ய விரும்பும் நாடுகள் எப்படிப் பார்க்கின்றன என்ற கோணத்தில் தான் புரிந்துகொண்டிருக்கிறேன். அந்தப் புரிதலில், பக்கத்தில் இருக்கும் பெரிய நாடான இந்தியாவும், தூரத்திலிருந்தே இலங்கையின் அதிகார சக்திகளை இயக்கும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் செய்யும் குழப்பங்களையும் உதவிகளையும் கவனித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் எனது இலங்கைப் பயணங்களின்போது நேரடியாகவும் பார்த்து அங்குள்ள நண்பர்களோடு விவாதித்து அறிந்து கொண்டுள்ளேன். இதன் பின்னணியில் இப்போது இலங்கையில் நடக்கப்போகும் தேர்தல் குறித்து எழுதப்படும் பதிவுகளையும் சில பத்திரிகைகளின் கட்டுரைகளையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பான்மை இனவாதம், பௌத்த அடிப்படைவாதம் என