இடுகைகள்

ஜூலை, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பரபரப்பின் கணங்களும் விளைவுகளும்

தமிழின் நிகழ்கால இலக்கியத்தளத்திலும் சிந்தனைத்தளத்திலும் செயல்படும் பத்து எழுத்தாளர்களின் பத்து நூல்களை வெளியிடும் வெளியீட்டு நிகழ்ச்சியை உயிர்மைப் பதிப்பகம் நடத்தியது. சென்னை ஓரியண்ட் லாங்மேன் புத்தகக்கடையின் பின்புறம் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் -07-01-06, மாலை 6 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுக்கு, தமிழ் நாட்டின் மதிப்புமிக்க அரசியல் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு தலைமை தாங்கினார். அவர் ஒவ்வொரு நூலாக வெளியிடுவதும் அதைப் பெற்றுத் கொண்டவர், பதினைந்து நிமிடத்திற்குள் நூலை அறிமுகப்படுத்தியோ, விமரிசனம் செய்தோ பேசி முடிப்பதும் என்பது பதிப்பகத்தாரின் ஏற்பாடு. ஏற்பாட்டின்படி முதல் நான்கு நூல்கள் அ.ராமசாமியின் பிம்பங்கள் அடையாளங்கள், மு. சுயம்புலிங்கத்தின் நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள், எம். யுவனின் கைமறதியாய் வைத்த நாள், எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு என்ற நான்கு நூல்களும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதனைப் பெற்றுக் கொண்ட பத்திரிகையாளர் எஸ் விஸ்வநாதன் (ப்ரண்ட் லைன்), சுகுமாரன், பாவண்ணன், பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் பேசி முடித்தனர். நான்காவது நூலின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் மேடையிலி...

உலகமயச் சூழலில் கல்வி முறை மாற்றங்கள் :

நமது கல்வி புதியன படைக்கும் ஆற்றலை வளர்க்கவில்லை; மனப்பாடம் செய்வதையும் அதன் வழியாகத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் வழிமுறைகளையையும் தானே வளர்க்கிறது? இந்தக் கேள்வி, பேராசிரியர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் வந்த போது கேட்கப்பட்ட கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்டவர் கோவை நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவர். அதற்கு அவர் சொன்ன பதில்,

மாய யானையின் ஊர்வலம்

படம்
ஒரு மாநிலம் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரியதாக இருப்பது மாநில வளர்ச்சிக்கு நன்மை தருமா என்று கேட்டால் நிர்வாகவியல் சார்ந்தவர்கள் சொல்லும் பதில் ‘இல்லை’ என்பது தான். பரப்பளவில் சிறியதாக இருப்பதே நிர்வாக வசதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ற நிலை என்பது நவீன அரசியல் அறிவு சொல்லும் உண்மை . பழைய வரலாறும் கூட அதைத் தான் சொல்கிறது.