இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காண்டாமிருகமென்னும் அபத்த நாடக நிகழ்வெளி

படம்
சில பனுவல்கள் வாசிக்கும் போது புரியாமல் போய்விடும். ஆனால் அதன் அர்த்தம் விளங்கும்படியான நிகழ்வொன்றை நாம் சந்தித்து விட்டால் அந்தப் படைப்பு புரியத்தொடங்கி விடும். அரசியல் அதிகாரம் குறித்த விமரிசனத்திற்கு அபத்த நாடக வகையைத் திறமையாகப் பயன்படுத்திய அயனெஸ்கோவின் காண்டாமிருகம் (RHINOCEROS) அப்படிப் பட்ட நாடகம் என்பது எனது சொந்த அனுபவம். முதல் வாசிப்பில் கடைசி வரை காண்டாமிருகம் வரவே இல்லையே எனக் கேட்டுப் பதில் தெரியாமல் மூடி வைத்து விட்டு மறந்திருந்தேன். ஆனால் அந்தப் பிரதி வெவ்வேறு நிகழ்வுகள் நடக்கும் போது ஒவ்வொரு விதமாக அர்த்தம் தரும் பிரதியாக இருந்திருக்கிறது.  ஒரு நிகழ்வு நடந்த போது கிடைத்த அர்த்தத்தைச் சொல்வதற்கு முன்னால், முதல் தடவை அதன் அர்த்தத்தைப் புரிய வைத்த நிகழ்வைப் பார்க்கலாம். அப்போது நான் பாண்டிச்சேரியில் நாடகப்பள்ளியில் பணியாற்றினேன். முக்கியமான நாடகப் பிரதிகளைப் படிப்பதைக் கடமையாகவும் விருப்பமாகவும் செய்து கொண்டிருந்த நேரம். அயனெஸ்கோவின் காண்டாமிருகம் நாடகத்தை வாசித்து ஒரு வாரம் இருக்கும். நாங்கள் வசித்த புறநகரின் நலச்சங்கம் ஏற்பாடு செய்த ஒருநாள் சுற்றுலாவில் நானும் என...

தமிழகக்கல்வித்துறை: முன்னிற்கும் சவால்கள்

படம்
தமிழக வெற்றிக்கழகத்தின் அரசு, ஒன்றிய அரசின் நோக்கங்களோடு எந்தெந்த நிலையில் ஒத்துப்போகும், எந்தெந்த நிலையில் தனது தனித்துவத்தைப் பேணும் என்பதற்குச் சாட்சியாக இருக்கப்போவது தமிழ்நாட்டு அரசின் கல்வித்துறை. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள த.வெ.க. அரசின் பள்ளிக்கல்வித்துறையும் , உயர்கல்வித்துறையும் பெரும் சவால்களை எதிர்கொள்ள இருக்கின்றன.

மோகனரங்கனின் கவிதையாக்கமும் கருத்துலகமும்

படம்
பனுவலாக்கமும் வாசிப்பும் இலக்கியப்பனுவலாக்கம் இப்படித்தான் நடக்கிறது என உறுதியாகச் சொல்ல முடியாது. அதே நேரம் கதைப் பின்னல் கொண்ட புனைகதை, நாடகம் போன்றனவற்றை முன் திட்டமிடலின்றி எழுதிவிடுவதும் நடப்பதில்லை. எழுத்தாளர்களின் முன் திட்டமிடல்கள் இவ்விருவகை இலக்கியப் பனுவலாக்கத்திலும் ஒருவித முறைமையை உருவாக்கவே செய்கின்றன. ஆனால் பா அல்லது கவிதைக்கு முன் திட்டமிடல்கள் தேவைப்படுவதில்லை. திட்டமிடாமல் எழுதப்பட்ட கவிதைகளைப் பின்னர் ஒழுங்குபடுத்தும்போது ஒருவகைத் திட்டமிடல்களும் முறைமைகளும் உருவாவது நடக்கலாம்.

குடி நுழைவும் இருப்பும்

படம்
மே,15, 2026 இன்று மாலை அமெரிக்காவின் டல்லாஸ் நகரிலிருந்து விமானம் ஏறியிருக்க வேண்டும். சென்னையிலிருந்து தோஹா வழியாக வந்த கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் விமானம் டல்லாஸ் நகரில் இறக்கிவிட்ட தேதி நவம்பர், 17, 2025. இன்றோடு அனுமதிக்கப்பட்ட 180 நாட்கள் முடிந்துவிட்டன. நான் பெற்றுவந்த குடிநுழைவு அனுமதியின் பெயர் B -2. மகிழ்ச்சியாகத் தங்கியிருந்தல், விடுமுறையைக் கழித்தல் முதலான காரணங்களோடு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த அனுமதியில் ஒருவர் தொடர்ந்து 180 நாட்கள் அமெரிக்காவிற்குள் இருக்கலாம். முழுமையான நாட்களும் இருந்துவிட்டேன். ஆனாலும் இங்கிருந்து கிளம்பவில்லை.

தொடரும் உருட்டல்கள் (Trolls )

படம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியதிலிருந்து நெருக்கமாகக் கவனித்து வருபவன் என்ற நிலையில் இதனைச் சொல்ல நினைக்கிறேன். அவரது அரசியல் கருத்துகளையும் நிலைபாடுகளையும் ஊடகங்களில் சொல்வதில் தயக்கம் காட்டாத தலைவர் தொல்.திருமாவளவன். ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது அவர் நீண்ட காலமாகச் சொல்லும் முழக்கம்.

விலக்கப்படும் நந்திகள்

படம்
தேர்தல் வழியாகத் திரும்பவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் குறுகிய காலத்தில் அதன் செயல்பாடுகள் சில, தமிழகத்தின் பெரும்பான்மை மக்களால் ஏற்புடையனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. தனது தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்த இலவசங்கள், கரோனாப் பெருந்தொற்றைச் சமாளித்தல் போன்றனவற்றிற்காகக் கிடைக்கும் பாராட்டுகளும் ஏற்புகளும் பொதுப்புத்தி சார்ந்தவை. அவற்றைத் தாண்டித் திராவிட இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த முன்னெடுப்புகளும் கவனிக்கப்படுகின்றன; பாராட்டப்படுகின்றன என்பதே இப்போதைய விவாத மையம்.

பெயரில் என்னதான் இல்லை?

படம்
“ரோஜா, ரோஜாவாக இருக்கிறது ” இந்த தொடர் சேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தில் இருக்கும் வாக்கியம். ஆனால் அதைத் தனது கவிதையின் தலைப்பாக மாற்றிக் கவிதை ஒன்றை எழுதியவன் கவி ஜெற்ரூட் ஸ்டெயின் என்று படித்த ஞாபகம். “என்ன பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜா தான்;ஏனென்றால் ரோஜா ரோஜாவாகவே இருக்கிறது ” என்று முடியும் அந்தக் கவிதை எப்போது ரோஜாப்பூக்களைப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து விடும்.

பொது உளவியலின் அரசு

படம்
  தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளைத் தகர்த்த ஒன்றாகத் தோற்றம் கொண்டிருக்கின்றது. அந்த முடிவுகளின் அடிப்படையில்   உருவான அரசை பொது உளவியலின் அரசு என வரையறை செய்யலாம். 

மனுஷ்யபுத்திரன்: அவசரப்பட்டு எடுத்த முடிவு

படம்
சென்னை மாவட்ட நூலகக்குழுவின் தலைவராக இருந்த கவி. மனுஷ்யபுத்திரன் அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித் துவிட்டுச் சில நாட்களுக்கு முன்பு வெளியேறியிருக்கின்றார். இந்த வெளியேற்றம் அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது எனது கருத்து. அவரை நியமனம் செய்த அரசின் பதவிக்காலம் இன்னும் முடியவில்லை. அடுத்த அரசு இன்னும் உருவாகவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து செயல்படுவது தார்மீக அடிப்படையில் தவறானது அல்ல. பல்கலைக்கழக அளவில் இதுபோன்ற நியமனப் பதவிகளில் இருந்து பணியாற்றிய அனுபவத்தில் இதனைச் சொல்கிறேன்.

மே நாள் - மாணவப்பருவ நினைவுக்குறிப்பு

படம்
முதுகலை படித்தபோது இதழியல்,ஒப்பீட்டிலக்கியம், நாடகவியல், நாட்டுப்புறவியல் என நான்கு விருப்பப்பாடங்கள் இருந்தன. அதில் எனது விருப்பப்பாடம் இதழியல். அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் இதழியல் பாடத்திற்கென இளம் விரிவுரையாளராகத் தமிழ்- இதழியலில் முனைவர் பட்டம் செய்திருந்த அ.சாந்தா அவர்கள் இருந்தார். மிகுந்த ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் வழி நடத்துவார். எனக்கு ஓராண்டுகளுக்கு முன்னால் அதே விருப்பப்பாடத்தைத் தேர்வுசெய்த முன்னோடிகள் ஆர்.பாலகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன் . அவர்களே இந்தப் பாடத்தை விரும்பிப் படித்து என்னைத் திருப்பி விட்டவர்கள். இந்தியக் குடிமையியல் பணித்தேர்வை ஆர்.பாலகிருஷ்ணனுக்கு அறிமுகம் செய்து வெற்றிபெற்றவராக்கியதே அந்த இதழியல் விருப்பப்பாடம் தான். நான்கு பருவத்தில் மூன்று தாள்கள் உண்டு. கடைசிப்பருவத்தில் செய்முறைப் பயிற்சிகளே அதிகம் இருக்கும்.

நீதிமன்றமும் சட்டமன்றமும் - இரண்டு குறிப்புகள்

படம்
இரண்டு நாட்களாக முகநூலில் வலம் வரும் இவ்விரண்டின் மீது எனது கருத்தை எழுத நினைத்தேன். ஆனால் ஏனோ எழுதியெழுதி அழித்துவிட்டேன். இப்போது  சொல்லாமல் விட்டால் தூக்கம் வராது என்பதுபோலத் திரும்பத்திரும்ப நினைவில் வந்துகொண்டே இருக்கின்றன. இரண்டில் ஒன்று பேரறிவாளன் தொடர்பானது; இன்னொன்று கருத்துக்கணிப்புகளை முன்வைத்தல் தொடர்பானது. இவ்விரண்டின் தொடர்பில் நான் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பணிக்காலம்  சில புரிதல்களைத் தந்துள்ளது. அந்த் அடிப்படையிலேயே இதனைச் சொல்கின்றேன் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை பெற்றுத் திரும்பியவர் பேரறிவாளன். அவர் மீது கொலைக்குற்றம் தொடர்பில் வழங்கப்பட்ட மரணதண்டனையும், பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டதும் குறித்தெல்லாம் எனக்குக் கருத்துக்கள் இருந்தாலும் அதனை இப்போது விவாதிப்பதில் பொருள் எதுவும் இல்லை. நீதிமன்றம் வழங்கிய தண்டனைக் காலத்தை முடித்து வெளியே வந்துவிட்டார். சிறையில் இருந்தபோதும், சிறையிலிருந்து வெளியே வந்தபின்னும் தனது கல்வி ஆர்வத்தைத் தக்கவைத்துத் தொடர்ந்து கற்றுத் தேர்வு எழுதி வழக்குரைஞராகத் தன்னைத் ...