இடுகைகள்

மணிரத்னத்தின் அரசியல்: விமரிசனமும் மாற்று அரசியலும்

படம்
(இருவா், ஆய்த எழுத்து படங்களை முன்வைத்து)  தமிழ் சினிமா முற்றமுழுதுமாக வியாபார சினிமாவாக மாறிவிட்டது மட்டுமல்ல, சினிமா பார்ப்பவா்களையும் வியாபார சினிமாவின் இன்பதுன்பங்களில் – லாப நஷ்டங்களில்ள பங்கேற்க வேண்டியவா்களாகவும் மாற்ற முயல்கின்றன. சினிமா செய்திகளைத் தரும் பத்திரிகைகளின் பங்கும் அவற்றில் உண்டு. பெரும் முதலீட்டில் எடுக்கப்படும் சினிமா வியாபார ரீதியாக வெற்றியடைந்தே தீர வேண்டும் என்ற மனோபாவம் உண்டாக்கப்படுகிறது. மணிரத்தினத்தின் “இருவர்“ வியாபார ரீதியாகத் தோல்வியடைந்தபோது வெளிப்படுத்தப்பட்ட வருத்தக்குரல்களின் உளவியல், சமூகவியல், பொருளியல் காரணிகள் ஆராயப்பட வேண்டியவை. 

பிகில்: குறையொன்றும் இல்லை

படம்
தனது பார்வையாளர்கள் கூட்டம் எது எனத் தீர்மானித்துக் கொண்டபின் அதற்கான படம் எடுப்பதும், அந்தப் பார்வையாளர் களுக்குக் குறையில்லாமல் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவதும் நேர்மையான செயல் என்பதை நாம் ஒத்துக் கொள்வோம் என்றால் பிகில் நேர்மையான படம். அதனைக் குறைசொல்லும் விதமாக- புறமொதுக்கும் விதமாக - ஒரு காட்சியும் இல்லை.திகட்டத் திகட்டக் காட்சிகளை அமைத்துள்ளார். நயன்தாரா,கதிர், ஜாக்கி ஷெராப், யோகிசேது, ஆனந்தராஜ், திவ்யதர்சினி, விவேக், கு.ஞானசம்பந்தன் எனப் பார்த்த முகங்களும் விளையாட்டு வீராங்கணைகளாகப் பத்துப்பன்னிரண்டு பெண்களும், அடியாட்களாகப் பல ஆண்களும் நடித்துள்ளார்கள். இரண்டு பெண் விளையாட்டு வீராங்கணைகளுக்காகத் தனித்தனிக் கதைகள், தந்தை - மகன் என இரண்டு விஜயுக்குமே பின்னோக்கு உத்தியில் முன் கதைகள், குத்துப்பாட்டு, உத்வேகமூட்டும் சிங்கப்பெண்ணே என்னும் பாட்டோடு, இரண்டு ஜோடிப்பாடல்கள் எனக் கச்சிதமாகப் படம் உருவாக்கப்பட்டுப் பார்வையாளர்கள் இருக்கையிலிருந்து கவனம் திரும்பாமல் படம் பார்க்கிறார்கள் மொத்தத்தில் குறையொன்றும் இல்லை.

கலையியல் நோக்கம் கொண்ட சினிமா: ஜல்லிக்கட்டு என்னும் இந்திய அபத்தம்

படம்
ஜ ல்லிக்கட்டு: இந்திய அபத்தம் ஒரு சினிமாவைத் திரை யரங்கில் வெளியிட்ட பின் குறிப்பிட்ட காலம் காத்திருந்தால் இணையம் வழியாகப் பார்க்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் தொழில் நுட்பம் உருவாக்கி விட்டது.

தேர்வுகள் -வேலைகள்- தரம்

படம்
தினக்கூலிகளுக்குப் பதில் மணிக்கூலிகள் கல்லூரிக் கல்வியில் இணையவழி வருகைப் பதிவைப் பல்கலைக்கழக மானியக்குழு இப்போது வலியுறுத்துகிறது. அதனை ஏற்றுப் பல்கலைக்கழக கல்விக்குழுக்கள் விதிகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு உள்மதிப்பீட்டுத் தேர்வின் போதும் அதற்கு முன்னர் மாணாக்கர்களின் வருகைப்பதிவு கணக்கிடப்பட வேண்டும் எனக் கடுமையாகச் சொன்னபோது ஒரு கல்லூரியின் முதல்வர் அதனை மறுத்துப் பேசினார்.

கலப்புத் திருமணங்களின் பரிமாணங்கள் : அழகுநிலாவின் பெயர்த்தி

மொழியை விரும்பும் ஒவ்வொருவரும் அம்மொழியில் இருக்கும் எல்லாச் சொற்களையும் எல்லா நேரத்திலும் விரும்பிவிடுவதில்லை என்பது ஒரு நகைமுரண்நிலை. சொற்கள் – எதிர்ச்சொற்கள் அறிவது ஐரோப்பிய மொழிக்கல்வியில் -குறிப்பாக ஆங்கிலக் கல்வியில் தொடக்கநிலை. வேற்றுமொழிச் சொற்கள் என்றில்லாமல் தாய்மொழியில் இருக்கும் சொற்களைக்கூட விரும்பப்படும் சொற்கள், வெறுக்கப்படும் சொற்கள் எனப் பட்டியலிட்டே பயன்படுத்தி வருகிறார்கள் மனிதர்கள். சொற்களில் விரும்பும் சொற்களை உடன்பாட்டுச் சொற்கள் என்றும் நேர்மறைப்பார்வையைத் தரும் சொற்கள் என்றும் சொல்லி அதிகம் பயன்படுத்துகின்றோம். எதிர்மறைப்பார்வையைத் தரும் சொற்களை விருப்பத்திற்குரியன அல்ல என்று கருதிப் பயன்பாட்டையே தவிர்க்க நினைப்பதும் மனித இயல்புதான்.