இடுகைகள்

பள்ளிப்பருவமும் பயணங்களும்

படம்
எனது பள்ளிக்கூட நினைவுகள் எப்போதும் பயணங்களோடு சேர்ந்தே மனதிற்குள் அலையடிக்கக் கூடியன. பள்ளிக்கூடமே போகாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த நான் பள்ளிக்கூடம் போகத் தொடங்கியதற்கு  மறுக்கப்பட்ட ஒரு பயணமே காரணமே.

முகுந்த் நாகராஜனின் K – அலைவரிசை: நவீனக் கவிதைகளின் ஒரு முகம்

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகள் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ள ன . இந்தப் பத்தாண்டுக ளைத் தீவிரமான இலக்கிய விவாதங்களின் காலம் என்பதை விடத் தீவிரமாக இயங்குவதாகப் பாவனை செய்யும் இடைநிலைப் பத்திரிகைகளின் காலம் எனச் சொல்லலாம்.

உதிர்வது உத்தமம்

அற்றைத்திங்கள் வலியின் துயரம் சுமந்த கருவறை வாசனை முகர்ந்து சொல்ல முடிந்தது. புன்னகை கசியும் எளிமையும் தோற்றம் இவளெனச் சொன்ன முன்னோன் நாவை ரசிக்க முடிந்தது. மாற்றுக் கருத்தின் களம் ஒன்று கண்டு விரித்துப் பரப்பி விசும்ப முடிந்தது. விலக்கி வைக்கப்பட்ட கனிகள் ருசிக்கும் நாவின் ருசியை உணர முடிந்தது. இற்றைத்திங்கள் ரகசியக்குறிகள் விரைக்கும் வேகம் அறிய முடிகிறது. அதிகாரத்தின் வேர்கள் பரவும் வழிகள் சொல்லத்தெரிகிறது பணத்தின் மதிப்பும் உறையும் வெளியும் ஆழ்கடல் எனினும் துடுப்புகள் உண்டு. துரத்திச் செல்லும் வலிமையும் உண்டு. எதிரிகள் கூட்டம் எழுந்து வந்தால் வலிமை காட்டிட இனமென்னும் துருப்பு என் வசம் உண்டு, அவ்வெண்ணிலவில் கவியுணர் கனவும் கலைக்கும் ஆற்றலும் இருந்தன அறிவேன். இவ்வெண்ணிலவில் உருவேற்றிய பிம்பம் இனியுமெதற்கு? உதிர்வது உத்தமம். 

எனது இந்தியா.. எந்த இந்தியா?

இரண்டும் நடந்தது ஒரே ஊரில் அல்ல ; ஒரே நாளிலும் அல்ல ; ஆனால் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள். முந்திய நிகழ்வு சிங்காரச் சென்னையில் ; சென்ற வருடம் 2009 கிறிஸ்துமஸ் விடுமுறையில். இரண்டாவது நிகழ்வு மாநகர் மதுரையில் போனவாரம் ; 2010டிசம்பர்1.

வலது கையும் இடது காதும்

தன்னெழுச்சியான போராட்டங்கள் எவை ? மறைமுகத்தூண்டுதல் காரணமாக உண்டாகும் போராட்டங்கள் எவை என்றெல்லாம் இப்போது கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. இதைப் போலவே நிர்வாகங்களை உண்மையிலேயே எதிர்க்கும் வழக்குகள் எவை ? நிர்வாகமே தூண்டி விட்டுப் போடச் செய்யும் வழக்குகள் எவை ?