இடுகைகள்

மந்தையின் ஆடுகள் : பற்றும் வெறியும்

படம்
இயல்பான விருப்பங்களைப் பற்றாகவும், பற்றின் அளவைத் தாண்ட வைத்து வெறியாகவும் மாற்றுவதில் நமது காலச் சமூக ஊடகங்கள் மறைமுகக் காரணிகளாக இருப்பதாகத் தோன்றுகிறது. வெறியாக மாறும்போது மனிதர்கள் வன்மங்கொண்டவர்களாக மாறிப் பகைமை உணர்வுக்குள் தள்ளப்படுவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் மூளையைத் தொலைத்துவிட்டுச் சிந்திக்க மறந்து கூட்டத்தின் போக்குகளுக்குள் (Trends) சிக்கிக்கொள்கிறார்கள். தங்களின் திறனைக் கைவிட்டுக் கூட்டத்தின் பகுதியாகக் கலந்து விடுகிறார்கள். அண்மையில் உருவான சில மந்தைப் போக்குகளை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

அகண்: உள்ளோடும் தோற்றமயக்கம்

படம்
தமிழ்வெளி(ஏப்ரல், 2024 )யில் வந்துள்ள சுஜா செல்லப்பனின் இந்தக்கதையை வாசித்து முடித்தபோது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் வாசித்து விவாதிக்க வேண்டிய கதையாக முன்மொழியத் தோன்றியது. கதையாக்கத்திற்குத் தெரிவு செய்துள்ள உரிப்பொருள் சார்ந்து அதனைப் பெண்ணெழத்து என்று வகைப்படுத்தலாம். எழுதுபவர்கள் அப்படி வகைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. எழுத்துக்கு வாழ்க்கை அனுபவம் சார்ந்த நிகழ்வுகள் அல்லது எண்ணங்கள் மட்டுமே காரணம் என நம்புவதின் வெளிப்பாடே இவ்வகையான வகைப்பாட்டின் பின்னால் இருக்கின்றன என நினைப்பவர்கள் தான் இப்படி வகைப்படுத்துகிறார்கள் என்ற மறுதலிப்பில் உண்மையில்லாமல் இல்லை.

தொலைந்துபோகும் பெண்கள்

படம்
எளிமையான கதைமுடிச்சு, அதனை அவிழ்த்து அவிழ்த்துக் காட்டும் திரைக்கதை அமைப்பு, காட்சிப்படுத்துதலிலும் நிகழ்வுகளை அடுக்கிச்சொல்வதிலும் நவீனத்துவ முறைமை என்பது அமீர்கானின் சினிமாக்களின் பொதுத்தன்மை. அத்தோடு குறிப்பான இடத்தில் – குறிப்பான சமூகச்சூழலில் வைத்து விவாதிக்கும் பேசுபொருள் என்பதும் இன்னொரு பொதுத்தன்மைதான். தொலைந்து போகும் பெண்கள் ( LAAPATAA LADIES) படமும் அப்படியான பொதுத்தன்மைக்குள் எடுக்கப்பட்டுள்ள நல்லதொரு சினிமா.

கல்விச்சந்தையும் தமிழ்க்கல்வியும்

படம்
எண்பதுகளில் கல்வியைக் குறிக்கும்போது சந்தை அதனோடு இணையும் சொல்லாக இருந்ததில்லை. இப்போது எல்லாத் துறைகளோடு சந்தை இணைந்துவிட்டது. மருத்துவம், பொழுதுபோக்கு, வேளாண்மை என எல்லாமே சந்தையின் தேவைக்கானதாக மாறிவிட்டன. கல்வியும் இப்போது கல்விச்சந்தை என்ற சொல்லோடு சேர்ந்தே குறிப்பிடப்படுகின்றது.

திருக்குறள்: மறு வாசிப்பும் பலதள வாசிப்பும்

படம்
ஒரு மொழியில் எழுதப்பெற்ற எல்லாப் பனுவல்களையும் அம்மொழியைப் பேசும்/ எழுதும் மனிதர்கள் வாசித்து விடுவதில்லை; தங்கள் வாழ்வியலுக்குத் தேவையென ஏற்றுப் பயன்படுத்திக்கொள்வதுமில்லை. அவரவர் விருப்பம், அவரவர் தேவை, அவரவர் பயன்பாடு போன்றனவே அவரவர் மொழியில் எழுதப்படும் பனுவல்களை வாசிக்கச் செய்கின்றன; பயன்படுத்தச் சொல்கின்றன; கொண்டாடவும் தூண்டுகின்றன. அனைத்து வகையான அறிவுத்துறைப் பனுவல்களுக்கும் சொல்லப்படும் இக்கருத்துநிலை இலக்கியப் பனுவல்களுக்கும் பொருந்தும் என்பதை ஒருவர் மறுத்து விடமுடியாது. அதே நேரம் ஒரு மொழியில் தோன்றிய சிலவகைப் பனுவல்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன; பேசப்படுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இலக்கியப்பனுவல்கள் பலதரப்பினரிடமும் அறிமுகம் பெறுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் கிடைக்கும் பனுவல்களில் திருக்குறள் அப்படியானதொரு பனுவலாக இருக்கிறது. ஆகவே திருக்குறளைத் தமிழர்கள் திரும்பத்திரும்ப மறுவாசிப்புச் செய்கிறார்கள். கொண்டாடுகின்றார்கள். இக்கட்டுரை திருக்குறள் மறுவாசிப்பு செய்யப்படுவதின் காரணங்களையும் அதனைத் தொடர்ந்து,பல தளவாசிப்புகள் ஏன் தேவை என்பதையும் முன்வ

ஊர்கள் - பயணங்கள் -நினைவுகள் -அனுபவங்கள்

படம்
பிறந்த ஊரில் வாழ்ந்த காலம் குறைவுதான். அது ஒரு மிகச் சிறிய ஓர் மலையடிவாரக் கிராமம். 100 வீடுகள்கூடக் கிடையாது. அதிகபட்சக் கொண்டாட்டம் வைகாசியில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவும் தைத்திங்களில் நடக்கும் மாடு விரட்டும்தான், இதுவரையான வாழ்நாளில் நான்கில் ஒரு பகுதிகூட அங்கிருந்ததில்லை. படிக்க என்றும் வேலைக்கென்றும் பார்க்கவென்றும் பழகவென்றும் திரியவென்றும் திளைக்கவென்றும் சென்று திரும்பிய வெளிகள்.ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்த - திண்டுக்கல், மதுரை, பாண்டிச்சேரி, நெல்லை, வார்சா.. அங்கிருந்தபடியே சென்று திரும்பிய வெளிகள் ஒவ்வொன்றும் வந்துபோகின்றன. விலகிப்போன கொண்டாட்டங்கள் 15 ஆண்டுகளுக்கு முன் பார்த்த மாரியம்மன் திருவிழா. சொந்தக் கிராமத்தில் பள்ளிப்பருவம் எட்டாம் வகுப்போடு முடிந்துபோனது. ஒன்பது முதல் படிப்புக்காகாத் திண்டுக்கல், மதுரை என நகர்ந்தபோதும் வைகாசியில் நடக்கும் மாரியம்மன் பொங்கல் விழாவில் தவறாமல் கலந்து கொள்வதுண்டு. பணி நிமித்தம் புதுச்சேரி, திருநெல்வேலி,வார்சா, கோயம்புத்தூர் எனத்தாவிக் கொண்டிருந்ததால் எப்போதாவது வந்து போவதாக மாறியது. ஓரிரவும் ஒரு பகலும் நடக்கும் கொண்டாட்டத்தில் மாரிய

வாக்களித்தோம்; காத்திருப்போம்.

படம்
எனது வாக்கைச் செலுத்துவதற்கு ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நடந்து சென்று வாக்களிப்பது என முடிவு செய்ததால் காலையில் நடக்கவில்லை. அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நடந்தபோக 15 நிமிடம் ஆகும். ஒன்பது மணிக்குக் கிளம்பி 09.15 க்கு வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு வெளியேறிய போது மணி 10.12. நாம் அளித்த வாக்கு யாருக்குப் போகிறது என்பதைக் காட்டும் ஏற்பாடும் இருக்கிறது.