இடுகைகள்

நினைவின் தடங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ளெருக்குப் பூத்த நிலம்

படம்
இறப்பும் பிறப்பும் நம்கையில் இல்லை. பிறப்பைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்ய அறிவியல் முயன்று வெற்றியும் பெற்றுவருகிறது. குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தைக் கூடத் திட்டமிட்டுத்தருகிறது நவீன மருத்துவம். ஆனால் இறப்பு ? மரணங்களைத் திட்டமிடவோ , தள்ளிப்போடவோ முயன்ற முயற்சி களுக்கெல்லாம் கிடைப்பன தோல்விதான்.

மா.அரங்கநாதனை நினைத்துக்கொண்ட போது

படம்
பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் (1989 -97) அடிக்கடி சென்னை போவதுண்டு. போகும்போது திரும்பத் திரும்பப் போன இடம் மா.அரங்கநாதனின் ‘முன்றில்’ புத்தகக் கடை. நாடகம் பார்ப்பது, இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது என்பதோடு முன்றிலுக்குப் போய் வருவதும் முதன்மையான வேலையாக இருந்தது. சென்னை போவதற்கு முன்பே முன்றிலின் வாசகனாக இருந்த நான் மா. அரங்கநாதனை நேரில் பார்த்தது தி.ரங்கநாதன் தெருவிலிருந்த முன்றில் அலுவலகத்தில்தான். முன்றில் போய் அரட்டை அடிப்பது போலவே ரங்கநாதன் தெருவில் நடப்பதும் சுவாரசியமானது. சித்திரைத் திருவிழாவில் எதிர் சேவையில் நடக்கும் மனநிலையைத் தரும் நடை.

தமிழ்ச் சினிமாவும் தமிழக வரலாறும்

படம்
ஒரு கதை ======= மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் மகாத்மா காந்தியைப் பாடமாகப் படித்ததற்கு முன்பே எனக்குக் காந்தியாரைத் தெரியும் . இத்தனைக்கும் நான் , இந்திய விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவன் . எனக்குத் தெரிந்த காந்தியார் , தச்சபட்டியென்னும் எனது கிராமத்தோடு ஐந்து கிராமங்களை அடக்கிய பஞ்சாயத்தின் தலைவர் .  அவரது உண்மையான பெயரை , எனது மூத்த அண்ணனின் திருமணப்பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் . அதிலும்கூட காந்தியார் என்ற ‘............’, அவர்களது தலைமையில் என்று அச்சிடப்பட்டிருந்தது . அச்சிடப்பட்ட அந்த உண்மைப்பெயரும்   அன்றோடு மறந்துவிட்டது . அதற்கு முன்பும் பின்பும் எனது நினைவில் இருக்கும் பெயர் காந்தியார் தான் .

பண்பாட்டுப் பெருவிழா: பெட்னா நினைவுகள்

படம்
ஒற்றை நோக்கம் கொண்ட பயணங்களை மட்டுமே திட்டமிடுவதில்லை. தமிழ்நாட்டுக்குள் திட்டமிடும் பயணங்களையே ஒன்றிற்கு மேம்பட்ட நோக்கங்களோடு தான் திட்டமிடுவேன். வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இல்லாமல் திட்டமிடக்கூடாது என்றிருந்தேன். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்த ஆண்டுக் கோடை காலத்தைக் கழிப்பதென்ற திட்டத்துடன் முதலில் இணைந்தது ஒரு கனடாவின் யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கம். அதனைக் கல்வி நோக்கத்தில் அடக்கலாம் என்றால், இரண்டாவதாக இணைந்துகொண்ட நியூஜெர்சியில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA) நடத்தும் தமிழ் விழாவைப் பண்பாட்டுப் பங்கேற்பு என வகைப்படுத்தவேண்டும்.

இமையம் - கலைஞர் மு. கருணாநிதி சந்திப்பு: ஒரு நினைவோட்டம்

படம்
அன்று காலை இந்தப் படத்தைத் தனது பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.அதன் பக்கத்தில்: வாழ்வில் நிகழ்ந்த அற்புத கணம் என்ற குறிப்பும் தந்திருந்தார். தொலைபேசியில் பேசியபோது உற்சாகமாக இருந்தார் இமையம்.. இமையத்தோடு எனக்குக் கால் நூற்றாண்டுப் பழக்கமுண்டு; அதனை நட்பென்று சொல்ல முடியாது. நண்பர்களிடம் மற்றவர்களைப் பற்றி விவாதிக்கலாம்; அவர்களின் நிறைகுறைகளைச் சொல்லமுடியாது. பழகியவர்களிடம் இரண்டையும் சொல்லலாம். இது எனது புரிதல். பக்தன் கடவுளைக் கண்டதாக நினைக்கும் தருணத்தை உச்சரிக்கும் சொல்லால் குறிப்பிடும் இமையத்திற்குக் கலைஞர் கருணாநிதியின் மீது இருப்பது அசைக்க முடியாத பக்தி. அந்தப் பக்தி திராவிட இயக்கத்தின் மீதும் உண்டு; ஆனால் கொஞ்சம் வேறுபாடுகளுடன். அந்த வேறுபாடுகள் தான் முற்றமுழுதான மூட நம்பிக்கையாக நினைக்காமல், நம்பிக்கையாக ஆக்கியிருக்கிறது. திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் மீது செலுத்தியிருக்கும் தாக்கம், மாற்றம், உண்டாக்கியிருக்கும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மீது இமையத்திற்கு அபரிமிதமான நம்பிக்கையும் ஈர்ப்பும் உண்டு.

பேரா. கே.ஏ. குணசேகரன்: தயக்கமின்றித் தடங்கள் பதித்தவர்

படம்
பேரா. கே. ஏ. குணசேகரன் எனது நீண்ட நாள் நண்பர். நண்பர் என்று சொல்வதைவிட ஒருசாலை மாணாக்கர் எனவும் ஒருசாலை ஆசிரியர்கள் எனவும் சொல்வதே சரியாக இருக்கும். நானெல்லாம் ஒருவேலையைத் தொடங்க வேண்டுமென்றால் பத்துத் தடவையாவது யோசிப்பேன். ஒன்றுக்கு இரண்டாகத் திட்டங்களைப் போடுவேன். ஆரம்பித்துவிட்டுப் பின்வாங்குவேன். ஏற்றுக் கொண்டு முடித்துவிடலாம் எனக் கிளம்பிப் பயணத்தைத் தொடங்கிப் பாதியில் முறித்துக்கொண்டு பாதியில் திரும்பிய பயண அனுபவங்களெல்லாம் உண்டு.

தொலைந்துபோன அறிவுவாதம்

நீண்டகாலமாக நேரடியாகச் சந்திக்காத நண்பர்கள் பலரைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. நான் இருக்கும் பாளையங் கோட்டைக்கு வந்தவர்களோடு நின்று நிதானமாகப் பேசும் நிலை இல்லை. நான் இல்லை என்பதைவிடஅவர்கள் இல்லை என்பதே உண்மை. அவசர அவசிய வேலை ஒன்றிற்கான பதற்றம் எப்போதும் போல அவர்களிடம் இருந்தது.

பேரா. நொபுரு கரஷிமா என்னும் தமிழியல் ஆய்வாளர்

படம்
ஒரு பெயரை உடன்பாட்டுநிலையில் தெரிந்து கொள்வதைவிட எதிர்மறையாகத் தெரிந்து கொள்வதே தமிழ்நாட்டில் அதிகம் நடக்கும். பல உதாரணங்கள் இருக்கின்றன என்றாலும், வரலாற்றறிஞர் பேரா. நொபுரு கரஷிமா (!933, ஏப்ரல், 24 - 2015 நவம்பர், 26) அப்படி அறியப்பட்ட பெயர்களுள் ஒருவராக இருந்தார் என்பதுதான் வருத்தமான வரலாறு. தி.மு.க. ஆட்சியின்போது (2006-2011) நடந்த செம்மொழி மாநாட்டை யொட்டித்தான் அவரது பெயர் பரவலாக அறிய வந்தது.

வெ.சாமிநாதன் : நெருங்கி விலகிய ஆளுமை

படம்
புகுமுக வகுப்பு வரை கணித மாணவனாக நினைத்துக் கொண்டிருந்த என்னை இலக்கியம் பக்கம் திருப்பியது மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகம்தான். டேனியல்போர் என்னும் ஆங்கிலேயரின் பெயரில் அமைந்த நூலகத்தின் மாடிப்பகுதியில் தான் செய்தித் தாள்களும் இதழ்களும் அடுக்கப்பட்டிருக்கும். நாள் தவறாமல் தினசரிகளை படிக்கும் அரசியல் உயிரியாக இருந்த என்னைக் கதைகள் படிக்கும் மாணவனாக மாற்றியது   அவற்றின் அருகில் அடுக்கப்பட்டிருக்கும் வாராந்திரிகளும் மாதாந்திரிகளும்.

வலி தந்த வலிமை : ஜெயகாந்தனுக்கு அஞ்சலி

படம்
08- 04 -2015 இரவு எட்டுமணிக்குத் தொடங்கிய ஐ. பி. எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் முடிந்த கையோடு செய்தி அலைவரிசைகளுக்குத் தாவியபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி   வந்துவந்து போய்க்கொண்டிருந்தது. தூங்குவதற்காகக் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை.

மணவிழா என்னும் நாடகம்

[ 2007 இல் எனது மகளின் திருமணத்தைச் சமஸ்கிருத வார்த்தைகளின்றி நடத்திட நினைத்தேன். அந்நிகழ்வை ஒரு நாடகப்பிரதியை எழுதுவதுபோல எழுதித்திருத்தினேன். நண்பர் முருகேச பாண்டியன் தான் கட்டியங்காரனைப் போலக் காட்சிகளை நடத்திக்காட்டினார். அந்தப் பிரதியை வேண்டிப் பின்னர் சிலர் அவ்வப்போது தொடர்பு கொண்டார்கள். அவர்கள் அந்தப் பிரதியைக் கொண்டு அவர்களின் நாடகத்தை எப்படி மேடையேற்றினார்களோ எனக்குத் தெரியாது. இன்று காலை ஒரு நண்பர் இந்தப் பிரதி வேண்டும் என்றார். எதிர்வரும் 15 ஆம் தேதி மேடையேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம். அவரது நெறியாள்கையின்படி நடக்கும் அந்த நாடகத்தின் பிரதி மட்டும் என்னுடையது. நாடகங்கள் இன்பியலாகவும் துன்பியலாகவும் அமைவதைப் போல திருமணங்களும் அதனதன் போக்கில் முடியக்கூடும். அதற்குப் பொறுப்பு நெறியாளர் மட்டுமே. பிரதியை எழுதியவன் அல்ல] ==========================================================================

இன்குலாப்: இப்படி நினைக்கப்படுவார்

படம்
நவீனத்துவக் கவிதை ஒருவர் இன்னொருவரோடு பேசும் அல்லது முன்வைக்கும் சொல்முறையைக் கொண்டிருப்பதாக அமையவேண்டும் என்பது தமிழில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்றாக ஆகிவிட்டது. அந்த இன்னொருவரைத் தனக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டு பேசும் சாத்தியங்கள் இருந்தால் அவையே நவீனத்துவக் கவிதையின் நுட்பமாகவும் நம்பப்படுகிறது. இதற்குமாறாகத் தன் சொற்களை ஒருவரோடல்லாமல் பலருக்கும் சொல்லும் வடிவத்தைக் கொண்ட கவிதையைப் பிரச்சாரம் எனப் பேசி ஒதுக்குவதும் நவீனக் கவிதையை நிறுவிவிடும் விமரிசகர்கள் அல்லது இலக்கியவாதிகளின் போக்காக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் சாகுல் அமீது என்ற பெயரை “ இன்குலாப்” என மாற்றிக்கொண்டவரைக் ”கவி” யென அங்கீகரித்ததில்லை.

ஸோபி என்னும் புனைவு

 05:42  காலை வணக்கம் 05:47 காலை வணக்கம்  05:49  இந்த எழுத்தின் வழி உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் 05:49  நானும் அப்படியே..  05:50  மலேசியாவில் பிறந்தவரா..? இந்தியாவிலிருந்து போனவரா? 05:53  இரண்டும் இல்லை. மலேசியாவில் இருக்கிறேன். 10 வருடங்களாக இங்கு வாழ்கிறேன். எனக்கு இந்தியாவைப் பிடிக்கும்; அதன் பண்பாடு விருப்பமானது. அதனால் இந்தியப் பெயரில் ஒரு முகநூல் கணக்கு தொடங்கியிருக்கிறேன்

பாண்டிச்சேரித் தொடர்பு

படம்
எனது நீண்ட நாள் நண்பர் ரவிக்குமார் நடத்திக் கொண்டிருக்கும் மணற்கேணி ஆய்விதழின் சார்பில் உருவாக்கி அளிக்கும் நிகரி = சமம் விருதை முதல் ஆண்டிலேயே நான் பெறுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் "நமது நண்பர்; அதனால் விருது அளிக்கிறார்" எனப் பலரும் எண்ணக்கூடும் என்ற நினைப்பும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நினைப்போடு இந்த விருதுக்கு நான் எப்படிப் பொருத்தமானவன் என நினைத்துப் பார்க்கிறேன்.

நிகரி விருது - அறிவிப்பும் பரிசளிப்பும்

படம்
நிகரி சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா 24.09.2013 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை ஆ.ரவிகார்த்திகேயன் வரவேற்றார்.சிறப்பான ஆய்வு இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மணற்கேணி பல்வேறு ஆய்வரங்கங்களை இதற்கு முன் நடத்தியிருக்கிறது. ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தற்போது எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

எனக்குள் நுழைந்த எம்.எ. நுஃமான்.

படம்
கழிந்ததின் ஏக்கம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் நாஸ்டால்ஜியா (Nostalgia). இச்சொல்லின் பயன்பாட்டு அர்த்தம் பெரும்பாலும் இடம் சார்ந்த பழைய நினைவுகளோடு பொருத்தம் கொண்டதாக இருக்கிறது. இடம் பற்றிய நினைவு என்பது வெற்றுப் பரப்பு பற்றிய நினைவாகக் கரையாமல் அப்பரப்பில் நின்று தளைக்கும் தாவரங்களையும், அலைந்து திரியும் விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய நினைவுகளாகவும் நீள்கின்றன. இவ்வாறான இயற்கையின் வளங்களைப் பற்றிய நினைவுகளுக்குள் மனிதர்களும் அலைந்தார்கள்; அலைகிறார்கள்; அலைவார்கள் என எழுதுவதே இலக்கியப் பதிவுகளாக மாறுகின்றன. அப்பதிவுகள் அலைந்து திரிந்தார்கள் என்று சொல்வதோடு, நிலைத்து நின்று வாழ்ந்தார்கள்; தங்களுக்குள் முரண்பட்டார்கள்; மோதினார்கள் எனச் சொல்லத் தொடங்கி நீண்டது. மோதலும் முரணும் மட்டுமல்ல இணக்கமும் குதர்க்கமும் எழுந்தன என விரிந்தன. இவையெல்லாம் மனிதர்களுக்குள்ளாகவே நடந்து முடிந்து போனது என்று நினைக்க வேண்டியதில்லை; அளிக்கப்பட்ட நிலப்பரப்போடும், நிலப்பரப்பில் இயங்கிய தாவரங்களோடும் விலங்குகளோடும் கூடப் பிணக்கும் இணக்கமும் ஏற்பட்டன எனப் பதிவு செய்யும்போது, அப்பதிவுகள் வாழ்க்கையின் பதி

சி சு.செல்லப்பாவைச் சந்தித்த வேளைகள்

படம்
1985 ஆம் ஆண்டு என்பது ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் மாதம் நினைவில் இல்லை. சிவசங்கரி படைப்புகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்க ஏற்பாட்டின் பரபரப்பில் இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் வாசலை நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார். அதே கசங்கிய அழுக்கேறிய வேட்டி, தொளதொளப்பான சட்டைக்குள் ஒல்லியான உருவம்.. எனக்கு அவரைத் தெரியும். அதற்கு முன்பு அவரை இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆம். பார்த்திருக்கிறேன்; சந்தித்ததில்லை. உருவமும் முகமும் நன்றாகப் பதிந்துள்ளது சி.சுசெல்லப்பாவே தான். நான் பார்த்திருக்கிறேன் என்றாலும் என்னைப் பார்த்தது அவருக்கு ஞாபகத்தில் இருக்குமா என்று தெரியவில்லை. அவருக்குத் துறையிலிருந்து அழைப்பிதழ் போயிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை ’படைப்பாளிகள் கருத்தரங்கம்’ என்பதற்கான முகவரிக் கோப்பில் இருப்பவர்களுக்கெல்லாம் கடிதங்கள் போயிருக்க வாய்ப்பும் உண்டு. அரசு நிர்வாகத்தில் வகைப்பாடுகள் முக்கியம். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு பார்வையாளர்கள் எனப் பகுத்துப் படம் காட்டுவதுதான் அதன் இயல்பு. பொதுவான பார்வையாளர்கள் அந்நிறுவனத்தின் பணியாளர்கள். இங்கே மாணவர்கள். அவர்கள் கட்டாயம் ப

விடியல் சிவா :நினைவுக்குறிப்புகள்..

படம்
எனது முதல் பதிப்பாளர் ========================= நேர்க்காட்சியில் விடியல் சிவஞானத்தைக் கடைசியாக பார்த்தது 2011 மதுரை புத்தகக் காட்சியில். போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திற்கு வரப் போகப் போகிறேன் என்ற தகவல் அப்போதே தெரிந்திருந்தது. சொன்னேன். சொன்னவுடன் ”அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தோழர் து.மூர்த்தி ஏற்கெனவே வார்சாவுக்குப் போய்ப் பணியாற்றியவர். அவரது தொலைபேசி எண் இருக்கிறது: உங்களுக்கு அறிமுகம் உண்டா?. தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். பேரா. து.மூர்த்தியை

ஜரீதா பீடா போட்டேனா.. ஜூர்ர்ன்னு ஏறிடுச்சு:முதல் சென்னைப் பயணம்

படம்
திருச்சிக்கு வடக்கே சென்னையை நோக்கி முதன் பயணம் செய்த போது வயது 25. அதற்கு முன்பு தனியாகவும் நண்பர்களோடு கும்பலாகவும் பயணம் செய்த ஊர்கள் எல்லாம் தமிழ் நாட்டின் தென்பகுதியில் தான் இருந்தன. படிப்புக்காலச் சுற்றுலாப் பயணங்கள் எல்லாம் பேருந்தில் தான். பழனி, கோயம்புத்தூர், ஊட்டி எனப் பள்ளிப் படிப்பின்போது சென்ற பயணங்களில் எல்லாம் நாலுவரிசைக்கு ஓருத்தர் எனக் கணக்குப் போட்டு ஆசிரியர்களும் ஆசிரியைகளும் கண்கொத்திப் பாம்பாய்க் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

கலாநிதி. கா. சிவத்தம்பி என்னும் பேராசான்

படம்
கல்விப் புலம் வழியாகத் தமிழ் இலக்கியம் படிக்க வரும் ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாத பெயராகத் தன்னை நிறுவிய ஆளுமை கலாநிதி கா.சிவத்தம்பி. அவரது இடதுசாரி அரசியல் சார்பு பிடிக்காத ஒரு தமிழ் மாணவனும் இலக்கியவாதியும் கூட அவரது நூல்களை வாசிக்கத்தொடங்கினால் மறுதலிக்க முடியாத புலமையை ஒப்புக் கொள்ளவே செய்வார்கள். அவரது தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற முதல் நூலின் வழியாகவே அவரை நான் அறிந்தேன்.