வரையப்பட்ட பெண்கள்

டிக்டேக், ரீல்ஸ் போன்ற சின்னச் சின்னக் காணொளிக் காட்சிகளில் பெண்களின் உடல் முழுமையாகவும், நளினமான வளைவுகள் என நம்பும் பகுதிகளும் முன்வைக்கப்படுகின்றன. உடலின் ரகசியங்களை முன்வைப்பதின் நோக்கங்களைக் காமத்தின் பகுதியாக நினைக்கும் பார்வைக்கு மாறாக உடலரசியலின் தெரிவாகச் சொல்லும் சொல்லாடல்களும் உண்டு. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றினிடையே வரிசை கட்டும் பெண்களின் உடல்கள் தரும்


ஒருபடைத் தன்மையான அசைவுகள் ரசனைக் குரியனவாக இருப்பதில்லை. முன்வைக்கப்படும் உடலின் நோக்கங்களுக்குள் பார்ப்பவர்களை இழுத்துச் சென்று சலிப்பில் ஆழ்த்தி விடக் கூடியன. இதற்கு மாறானவை வரையப்பட்ட பெண் உடல்கள்.
கலையின் ரசனையைத் தொடங்க நினைப்பவர்கள் ஓவியக் கலையிலிருந்து தொடங்கவேண்டும் என்பது அரிச்சுவடிப்பாடம். புள்ளிகளை வைத்துக் கோடுகளாக்கி வண்ணங்களால் நிரப்பித் தருவதில் உண்டாக்கும் உலகம் நிதானமானது. கீழ்த்திசை ஓவியர்கள் வன்வண்ணங்களால் இயற்கையை வரைவதில் ஆர்வமுள்ளவர்கள். இயற்கையின் பகுதியாகவே மனிதர்களையும் வரைந்து தருவார்கள்.

வன்வண்ணங்களின் அடுக்குகளிலிருந்து நகர்ந்து செல்லும் மென்மை நோக்கிய நகர்வுக்கு பெண்களை வரைவதைக் காரணியாகக் கொள்வார்கள். இதற்கெதிராக மென்வண்ணங்களாலும் அதன் அடுக்குத்திரைகளாலும் பெண்களை வரையும் மேற்கின் ஓவியங்கள் நிதானமான ரசனையைக் கோருபவை. பெண்களை வரையும் ஓவியர்கள், பெண்களின் ஏதோ ஒரு கணத்தை - அசைவை -உணர்ச்சியின் திரட்சியைக் கட்டிவைத்துக் காட்டுகிறார்கள் என்று தோன்றுகிறது.
வரையப்பட்ட பெண்களின் ஓவியங்கள் ஒவ்வொன்றையும் விவாதிக்கும் - விவரிக்கும் சொல்லாடல்கள் ஓவியக் கலையை ரசிப்பதிலிருந்து எழுத்தின் வழியாக உருவாக்கப்படும் சித்திரிப்புகளை ரசிப்பனவாக மாறிவிடும் வாய்ப்புகள் உண்டு. அதிலும் கவிதையை ரசிக்க விரும்புபவர்கள் முதலில் வரையப்பட்ட பெண்களை ரசிக்கப் பழகலாம் என்றுகூடச் சொல்வேன். ஆணாக எனது தெரிவுகள் இங்கே வரையப்பட்ட பெண்களாக

இருக்கிறது. ஒரு பெண் இதன் மாற்றாக வரையப்பட்ட ஆண்களைத் தெரிவு செய்யக்கூடும்.
தொகுத்து வைத்துள்ள வரையப்பட்ட பெண்களில் சிலவற்றை ரசிப்பதற்காகத் தருகிறேன்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்