தமிழ் இலக்கிய விமர்சகர்கள்: இற்றைப்படுத்துதல்


1979 இல் சுவடு இதழ் தனது நான்காவது இதழை விமரிசனச் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.
அதில்.
1. க.நா.சுப்பிரமணியத்தைப் பற்றி சுந்தரராமசாமி,
2. தொ.மு.சிதம்பரரகுநாதன் பற்றி தமிழவன்
3. வெங்கட்சாமிநாதன் பற்றி வண்ணநிலவன்
4. சி.சு.செல்லப்பா பற்றி சி.கனகசபாபதி
5. நா.வானமாமலை பற்றி தி.க. சிவசங்கரன்
6. க.கைலாசபதி பற்றி தி.சு.நடராசன் ஆகியோர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அக்கட்டுரைகளைச் சுவடு ஆசிரியர் கவிஞர் பாலா, தனிநூலாக்க விரும்பியபோது அகரம் மீரா, இன்னும் சில கட்டுரைகளை இணைக்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். அதன்படி எழுதிச் சேர்க்கப்பட்ட கட்டுரைகள் இரண்டு.
1. வல்லிக்கண்ணன் - நம்பிக்கையூட்டும் தமிழ் விமர்சகர்கள் என்றொரு கட்டுரையையும்
2. தமிழ்நாடன் - விமரிசனம் மீதொரு விமரிசனம் என்றொரு கட்டுரையையும் எழுதித்தந்துள்ளார்கள்.இவ்விரண்டையும் முதலும் முடிவுமாக அமைத்து வெளிவந்த நூல் தமிழ் இலக்கிய விமர்சகர்கள்.
இந்த நூலை இப்போதையதாக்கி 2018 அல்லது 2019 இல் வெளியிட வேண்டும். அது நிச்சயம் 500 பக்க அளவுக்கும் அதிகமாகவே இருக்கும். அந்நூலில் ஆறுபேரைப் பற்றி எழுதிய ஆறு பேர்களின் விமர்சன முறைகளைக் குறித்து எழுதுவதோடு கூடுதலாக எழுதிச் சேர்க்க வேண்டியோர் பட்டியல் நீளமானது.

 ஆங்கிலத்தில் கிடைக்கும் துறைசார் போக்குகளை அறிய உதவும் வாசிப்புப் பரப்பு போல ஒருநூலாக அமைக்க வேண்டும். தமிழ்த் திறனாய்வு: வாசிப்புப் பரப்பு ( Tamil Literary Criticism: Reader) ஒன்றில் இடம்பெறத்தக்க தொகுதி ஒன்றில் திறனாய்வு அடிப்படைகள், அணுகுமுறைகள் பற்றியதாக 20 கட்டுரைகளையும், செய்ம்முறைத் திறனாய்வாக 20 கட்டுரைகளையும் தொகுத்துக் கொண்டு தமிழ்த் திறனாய்வாளர்களைக் குறித்த தனிக்கட்டுரைகளை எழுதி வாங்கவேண்டும். அப்படியொரு தொகுப்பில் கல்விப்புலம் சார்ந்த விமர்சகர்களின் எண்ணிக்கை பெரியதாக இருக்கும். அந்த எண்ணிக்கை வளர்ந்ததுபோல் கல்விப்புலம் சாராதவர்களின் எண்ணிக்கை வளரவில்லை.
 
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்த் திறனாய்வு அல்லது விமரிசனம் தனது திசையைத் தொலைத்துவிட்டது. அதை நேர்செய்ய இப்படியொரு தொகை நூலைக் கொண்டுவர வேண்டும். கவி. பாலாவுக்கு அகரம் மீரா உதவியாகவும் தூண்டுகோலாகவும் இருந்ததுபோல் இப்போதைய பதிப்பாளரொருவர் தூண்டுகோலாக இருக்க முன்வரவேண்டும். அம்முன்னெடுப்பு தமிழ் விமரிசனத்திற்கான முன்னெடுப்பு. முயன்று பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்